2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்.. முன்கூட்டியே தாக்கல் செய்யப்படுவது ஏன்?
சென்னை: 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலை 10 மணிக்கு தமிழக சட்டசபையில் தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் ஆளுநர் ரவி முதல் பத்தியை மட்டும் படித்துவிட்டு அதனுடன் கூடுதலாக சிலவற்றை படித்து, முழு உரையையும் படிக்காமல் புறக்கணித்துவிட்டார்.

அந்த உரையில் உண்மைக்கு புறம்பான விஷயங்கள் இருப்பதாக கூறி ஆளுநர் ரவி படிக்க மறுப்பதாக விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து அந்த உரையை சபாநாயகர் அப்பாவு படித்தார். அவர் படித்து முடித்ததுடன் ஆளுநரை விமர்சனம் செய்யத் தொடங்கினார்.
இதையடுத்து நாட்டுப் பண் தொடங்குவதற்கு முன்பே ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறினார். அரசு தயாரித்து கொடுத்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம் பெறும் வகையில் சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்று நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் முதல்வர் பதிலுரை ஆகியவை பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி பிப்ரவரி 13 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. 14 ஆம் தேதியும் விவாதம் தொடர்ந்த நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து சட்டசபை கூட்டம் மீண்டும் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது 2024- 2025 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பிப்.20-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து துறைகள்தோறும் மானியகோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று, துறைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு வரும் மார்ச் மாதம் மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என தெரிகிறது.
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், நடத்தை விதிகள் அமலாகிவிடும். அதன்பின் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடவோ, செயல்படுத்தவோ கூடாது. எனவே, தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி இந்தாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது துணை மானிய கோரிக்கைகளையும் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பிப்ரவரி 20ஆம் தேதி முதலே 2 பட்ஜெட்கள் மீதான விவாதமு் தொடங்கும். பிப் 21 ஆம் தேதி காலை, மாலை என இரு வேளைகளும் விவாதம் நடைபெறுகிறது. பிப்ரவரி 22 ஆம் தேதி விவாதத்திற்கு தங்கம் தென்னரசுவும் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமும் பதில் அளிப்பார்கள்.
தங்கத்தின் முதல் முழு பட்ஜெட்: கடந்தாண்டு பட்ஜெட்டில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தலை முன்னிறுத்தி புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.
அவரது துறை தங்கம் வசம் சென்றுவிட்டது. இதனால் அக்டோபர் மாதம் துணை நிலை பட்ஜெட்டை தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து தற்போது முழு பட்ஜெட்டையும் முதல் முறையாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications