சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுகவும் அமமுகவும் ஒன்றாக இணையும் -சசிகலாவை சந்தித்த தனியரசு எம்எல்ஏ பேட்டி

அதிமுக அமமுக ஒன்றிணையும் செய்தி விரைவில் வரும் என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக - அமமுக ஒற்றிணையவேண்டும். அந்த நற்செய்தி விரைவில் வரும் என எதிர்பார்கிறேன் என்று தனியரசு எம்எல்ஏ கூறியுள்ளார்.ஒரு பெண்ணாக பல சவால்களை சந்தித்திருக்கிறார் சிறைக்கு செல்வதற்கு முன்பு இருந்த அதே மன உறுதியுடன் நலமுடன் இருக்கிறார் என்றும் சசிகலாவை சந்தித்து பேசிய தனியரசு தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் அரசியல் ஆட்டம் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் இருந்தே ஆரம்பித்து விட்டது. சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி சென்னை திநகரில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் சசிகலாவை பிப்ரவரி 24ஆம் தேதியில் இருந்தே ஒரு சில அரசியல்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலவங்கள் அடுத்ததுத்து சந்தித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.

கருணை ஆட்சியா? காட்டாட்சியா? எதுவேண்டும்... - திமுக, காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடிய மோடிகருணை ஆட்சியா? காட்டாட்சியா? எதுவேண்டும்... - திமுக, காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடிய மோடி

சசிகலாவை சந்தித்த எம்எல்ஏ

சசிகலாவை சந்தித்த எம்எல்ஏ

சசிகலா விடுதலைக்குப் பின்னர் இதுவரை தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் நேரடியாக சென்று சந்திக்காத நிலையில் முதல்நபராக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் காங்கேயம் எம்.எல்.ஏ தனியரசு சசிகலாவை வியாழக்கிழமையன்று சந்தித்து பேசினார்.

அதிமுகவின் நற்பெயர் பாதிப்பு

அதிமுகவின் நற்பெயர் பாதிப்பு

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக - பாஜகவுக்கு இடையே இருக்கும் உறவு அதிமுகவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். நிர்வாக ரீதியாக பாஜகவோடு உறவு வைத்துக்கொள்வதில் தவறு இல்லை ஆனால் அத்தனை திட்டங்களை தொடங்கி வைக்கவும் மோடி, அமித்ஷா என பாஜகவினரை அழைக்கின்றனர். அது அதிமுக நற்பெயரை கெடுத்துவிடும்.

தனியரசு ஆருடம்

தனியரசு ஆருடம்

அதிமுக - அமமுக ஒற்றிணையவேண்டும். அந்த நற்செய்தி விரைவில் வரும் என எதிர்பார்கிறேன்.ஒரு பெண்ணாக பல சவால்களை சந்தித்திருக்கிறார் சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பு இருந்த அதே மன உறுதியுடன் நலமுடன் இருக்கிறார் சசிகலா. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக உள்ளது ஆனால் கட்சி ரீதியில் குளறுபடிகள் உள்ளன.

சசிகலாவை சந்தித்த லிங்குசாமி

சசிகலாவை சந்தித்த லிங்குசாமி

ஒருவேளை அதிமுக - அமமுக இணைப்பு சாத்தியமில்லாமல் போனால் இறுதி கட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யாருக்கு ஆதரவு என்பது குறித்து நல்ல முடிவு எடுக்கும் எனவும் கூறினார். இதனிடையே சசிகலாவை இன்று இயக்குனர் லிங்குசாமி மற்றும் நடிகர் பிரபு ஆகியோரும் சந்தித்தனர்.

English summary
AIADMK - AIADMK should unite. "I expect the good news to come soon," says Thaniyaru MLA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X