இன்ப அதிர்ச்சி.. தஞ்சாவூரில் கோட்டக் வங்கி வாடிக்கையாளர் கணக்கில் திடீரென வந்து விழுந்த 756 கோடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோட்டக் வங்கி வாடிக்கையாளர் ஒருவரது வங்கிக்கணக்கில் 756 கோடி ரூபாய் இருந்ததாக மெசஜ் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த டிஜிட்டல் யுகத்தில் அனைவருமே வங்கிகளையே பணம் அனுப்பவும் பெறவும் பயன்படுத்துகிறோம். ரொக்கத்தின் பயன்பாடு பெரியளவில் குறைந்தே வருகிறது. நாம் யுபிஐ போன்ற முறைகளில் பணத்தை அனுப்பி வருகிறோம்.

Thanjavur Kotak Bank customer suddenly got 756 crore rupees in his bank account

இதற்கிடையே வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் அதிகளவில் பணம் வந்து விழும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் இப்படித்தான் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி வாடிக்கையாளர் கணக்கில் ரூ. 9000 கோடி வரவு வைக்கப்பட்டது. இது மிகப் பெரிய சர்ச்சையானது.

இந்தச் சூழலில் மீண்டும் அதேபோல ஒரு சர்ச்சை சம்பவம் நடந்துள்ளது. தஞ்சாவூரில் கோட்டக் மஹேந்திரா வங்கி கணேசன் என்ற வாடிக்கையாளர் கணக்கில் ரூ. 756 கோடி பேலன்ஸ் இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நேற்றிரவு கணேசன் நண்பருக்கு அவர் யுபிஐ மூலம் பணம் அனுப்பியுள்ளார். அப்போது பேலன்ஸ் தொகை என்று அவருக்கு ரூ.756 கோடி இருப்பதாக வந்துள்ளது. இரவு நேரம் என்பதால் அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. காலையில் அவர் உடனடியாக இது குறித்து வங்கியைத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

பின்னர் வங்கி மேலாளரைச் சென்று சந்தித்தபோது கணேசனுக்கு வந்த குறுஞ்செய்தியைப் பெற்றுக் கொண்டு, செல்போன் நம்பரை வாங்கி வைத்துள்ளனர். என்ன விஷயம் என்பதைக் கண்டறிந்து தொடர்பு கொள்வதாகச் சொல்லி வாடிக்கையாளரை அனுப்பி வைத்துள்ளார். இருப்பினும், வங்கி சார்பில் இதுவரை எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை.

Thanjavur Kotak Bank customer suddenly got 756 crore rupees in his bank account

இது குறித்து கணேசன் கூறுகையில், "நேற்றிரவு நான் எனது கோட்டக் வங்கியில் இருந்து நண்பருக்குப் பணம் அனுப்பினேன். பணம் அவருக்குச் சென்றுவிட்டது. இருப்பினும், பணம் மீண்டும் எனக்கு வந்துவிட்டதாகவே எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் தான் எனக்கு பேலன்ஸாக 756 கோடி இருப்பதாக இருந்தது.

இது தொடர்பாகக் காலை நான் வங்கியில் சென்று கேட்டேன். வங்கி ஊழியர்களுக்கும் சரி, மேலாளர்களுக்கும் சரி இது குறித்து எதுவும் தகவல் தெரியவில்லை. மேலாளரை மீட் செய்த போது அவர் மெசேஜ், மற்றும் மொபைல் எண்ணை வாங்கி வைத்துக் கொண்டார். அதன் பிறகு எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+