எனக்காக பிரார்த்தனை செய்த எல்லோருக்கும் நன்றி.. விஜயகாந்த் உருக்கம்.. வீடியோ!
எனது உடல் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருக்கமான வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
Recommended Video

சென்னை: எனது உடல் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருக்கமான வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தேமுதிக கட்சி தெரிவித்து இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சார களத்திற்கு வருகிறார்.
இதனால் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. அதேபோல் தேமுதிகவினர் மத்தியில் இது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ நன்றி
இந்த நிலையில் இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டு இருக்கு வீடியோவில், பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே அன்பு கொண்ட சகோதர சகோதரிகளே. என் உயிரினும் மேலான அன்பு நெஞ்சங்களே எல்லோருக்கும் என் அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவர்க்கும் என் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
— Vijayakant (@iVijayakant) April 14, 2019 |
ஆதரவு
நமது சின்னம் முரசு. நாம் நான்கு சின்னங்களில் போட்டியிடுகிறோம். கூட்டணி கட்சிகளின் சின்னங்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றிபெறும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
|
என்ன கருத்து
இதற்கு தேமுதிக தொண்டர்கள், விஜயகாந்த் ரசிகர்கள் பெரிய அளவில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இவர் ''அரசியலே வேண்டாம்.... நீங்க நல்லா இருந்தா போதும்.'' என்றுள்ளார்.
|
விரைவில்
உங்களை இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கிறது கேப்டன். நீங்கள் விரைவில் உடல் நலம் பெற்று மீண்டு வரவேண்டும் என்று வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications