அதிமுக மீது பாயத் தயாராகும் பாஜக! அண்ணாமலை அமைதி காப்பதன் பின்னணி என்ன? பரபரக்கும் அரசியல் களம்!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை அதிமுக பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாக உணர்த்திவிட்ட நிலையில், பதிலடி கொடுப்பதற்கு பாஜக தரப்பு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசியக் கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை என்றும் மத்தியில் எந்த அரசு இருந்தாலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது எனவும் பேசி போகிற போக்கில் காங்கிரசுடன் சேர்த்து பாஜகவையும் அட்டாக் செய்தார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை தனித் தீர்மானமாகவே கொண்டு வந்து பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

நேற்றைய தினம் அதிமுக பொதுக்குழுவில் காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு காங்கிரஸ் சட்டசபைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை மிகக் காட்டமாக அறிக்கை வெளியிட்டு பதிலடி கொடுத்திருக்கிறார். அதேபோல் திமுக தரப்பிலும் ஆர்.எஸ்.பாரதி காட்டமான அறிக்கை விடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஆனால் பாஜக தரப்பில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்தோ எடப்பாடி பழனிசாமி பேச்சு பற்றியோ எந்த ரியாக்ஷனையும் யாரும் வெளிக்காட்டவில்லை. பாதயாத்திரை நிகழ்ச்சியில் பேசும் போது கூட அண்ணாமலை அதிமுக பற்றி பெரிதாக எதுவும் பேசவில்லை.
ஜனவரி 2ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற பிறகு அதிமுக -பாஜக இடையேயான வார்த்தைப் போர் வெடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதிமுகவும், பாஜகவும் மீண்டும் கூட்டணி சேர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கடுமையாக முயற்சித்து வந்தனர். ஆனால் அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி எடுத்த நிலைப்பாடு அவர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.
இன்னும் மூன்று மாதங்கள் இருப்பதால் அதற்குள் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என இன்னும் கூட இரண்டுக் கட்சிளின் நலன் விரும்பி பிரமுகர்கள் சிலர் நம்பிக்கை குறையாமல் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ முன் வைத்த காலை பின் வைக்கவே மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளார். இதனால் இனிமேல் தான் தமிழக அரசியல் களம் அனல் பறக்கவுள்ளது.
இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை இதற்கு முன் 2 விவகாரங்களில் எடுத்த முடிவிலிருந்து சிறிதும் பின்வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சசிகலாவையும், டிடிவி தினகரனையும் அதிமுகவுக்கு வேண்டாம் என்று ஒதுக்கினார். அதன் பிறகு யார் யாரோ எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் அவர்கள் இருவருடனும் கடைசி வரை சமாதானம் ஆகவில்லை.
அதே போல் தான் ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்திலும் வேண்டாம் என்றால் வேண்டாம் என்ற முடிவோடு உள்ளார். இருவரும் சமாதானமாக செல்ல வேண்டும் என பாஜக மேலிட பிரமுகர்களே பேசிப்பார்த்தும் எடப்பாடி பழனிசாமி தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. அதேபோல் தான் இப்போது பாஜக கூட்டணி விவகாரத்தில் தாம் எடுத்த முடிவிலிருந்து அவர் மாற வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications