இதுக்கு எதுக்கு தட்கலில் டிக்கெட் புக் பண்ண வேண்டும்? ஏசி 2ம் வகுப்பு பெட்டியிலேயே இதுதான் நிலைமை
சென்னை: ரயிலில் ஏசி பெட்டிகளிலும் முன்பதிவு செய்யாமல் பயணிப்பவர்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் நிறைய சமூக வலைதளங்களில் இப்போது பரவி வருகிறது. இந்த காட்சிகள் எல்லாம் வடமாநிலங்களில் மட்டுமே நடந்து வந்த நிலையில் தமிழ்நாட்டிலும் நேற்று எல்லா ரயில்களிலும் நடந்தது..
கடந்த ஏப்ரல் 14ம் தேதி எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்கள் செல்லும் ரயில் என்று கூறப்படுகிறது. அந்த ரயிலில் 2ம் வகுப்பு ஏசி பெட்டியிலேயே முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறியுள்ளனர். அவர்கள் முழுமையாக ரயிலில் ஏறிக்கொண்டதால், முன்பதிவு செய்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். 2ம் வகுப்பு ஏசி பெட்டியிலேயே இந்த நிலைமை என்றால், 3ம் வகுப்பு ஏசி பெட்டி, ஸ்லீப்பர் கோச்சுகளின் நிலைமை எல்லாம் யோசித்து பாருங்கள்..

ரயிலில் வடமாநிலத்திற்கு டிக்கெட் எடுத்து பயணித்தால் தீராத துன்பமான நிகழ்வாக மாறி வருகிறது பலருக்கு.. இதற்கு முன்பதிவு செய்யாத பயணிகள் மட்டும் காரணமல்ல... மத்திய அரசும், ரயில்வே துறையும் முக்கிய காரணம் என்கிறார்கள். பணக்காரர்கள் செல்லும் வகையில் உயர்ரக வசதிகளுடன் வந்தே பாரத் ரயில் உள்பட பல்வேறு சொகுசு ரயில்களை விடும் அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளாக சாமானியர்கள் அதிகம் பயணம் செய்வதற்கான ஏழைகளுக்கான ரயில்களையோ அல்லது ஸ்லீப்பர் பெட்டிகளையோ அதிகரித்ததா என்று கேள்வி எழுப்புகிறார்கள்..
வறுமை காரணமாக பிழைப்புத்தேடி வேறு நகரங்களுக்கு இடம் பெயரும் வடமாநில மக்கள், ஏசி பெட்டியோ, ஸ்லீப்பர் கோச்சோ எதையும் பார்க்காமல் ஏறுவதற்கு காரணம்.. அந்த ரயிலில் எப்படியாவது ஏற வேண்டும்.. அதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி.. அந்த ரயிலில் பொதுப்பெட்டிகளில் ஏறவே முடியாத நிலை ஏற்படும் போது, ஏசி பெட்டி என்றோ, ஸ்லீப்பர் பெட்டி என்றோ பார்ப்பது இல்லை.. டிக்கெட் பரிசோதகர்களால் இதை கண்டிக்கவே முடியாத அளவிற்கு நிலைமை எல்லை மீறிவிட்டது.
இதெல்லாம் வட மாநில ரயில்களில் தான் இவ்வளவு நாட்களாக இருந்து வந்தது. ஆனால் நேற்று பொதிகை, நாகர்கோவில், பல்லவன், வைகை என ஒட்டுமொத்த ரயில்களிலும் முன்பதிவு செய்யாத பயணிகள், முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறிவிட்டார்கள். கால்களை நீட்டி உட்காரக்கூட முடியாத அளவிற்கு ஸ்லீப்பர் கோச்களில் நிலைமை சின்னாபின்னமானது. உட்காரும் ரயில்களில், தாம்பரம், செங்கல்பட்டில் முன்பதிவு செய்த பயணிகள் உள்ளே ஏறவே முடியாத அளவிற்கு ரயில்களில் மக்கள் தொங்கி கொண்டு சென்றனர். இதுக்கு எதுக்கு தட்கலில் டிக்கெட் புக் பண்ண வேண்டும் என்று பல பயணிகள் குமுறினார்கள்..
This is not a General Coach
— Kapil (@kapsology) April 19, 2024
This is not a Sleeper Coach
This is not a 3AC Coach
This is a 2nd AC Coach!!
The crowd has reached one of the most premium coaches of Indian Trains. Only First AC is left to be destroyed by @AshwiniVaishnaw pic.twitter.com/qyByUevhUd
ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் தான் பயணிக்க முடியும் என்கிற நிலைமாறி, யார் வேண்டுமானாலும் ஏறலாம்.. இறங்கலாம் என்கிற நிலைமை தமிழ்நாட்டிலும் மாறத்தொடங்கி இருப்பது, மிகப்பெரிய குளறுபடிக்கு வித்திடும் என்கிறார்கள். ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் கோபத்தில் சண்டைகளில் ஈடுபடும் அபாயம் உள்ளது.
அதேபோல் சமானியர்கள் அதிகம் செல்லும் வகையில், ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் ஏராளமான புதிய ரயில்களை போர்க்கால அடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உச்சம் பெற்றுள்ளது. யானை பொறிக்கு சோளப்பொறி என்பது போல் ரயில்களையே ஏழைகளுக்கும் இயக்குவது கொடுமையானது என்றும், ஜூன் 4க்கு பிறகு அமையும் எந்த அரசாக இருந்தாலும் இதில் தான் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications