சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விஷாலுக்கு பெரும் தோல்வி.. தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க அதிகாரியை நியமித்தது தமிழக அரசு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷாலின் விளக்கம் திருப்தி இல்லாததால், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த டிசம்பர் 20-ம் தேதி விஷால் அணிக்கு, எதிரணியில் உள்ள தயாரிப்பாளர்கள் குழுவைச் சேர்ந்த டி.சிவா, ஜே.கே.ரித்திஷ், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தியாகராஜ நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர்.

The Government of Tamil nadu appointed a new officer For Film Producers Association

அப்போது பேசிய அவர்கள், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக் காலம் முடிந்த பிறகும் அதில் விஷால் தொடர்கிறார். வைப்புநிதியாக உள்ள 7 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளார். அவர் தலைவராகப் பொறுப்பேற்றபோது கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து சங்கங்களின் பதிவாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும், தயாரிப்பாளர் சங்க கணக்குகளை நிர்வகிக்க மாவட்ட பதிவாளர் என்.சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கான்பூர் ஏர்போர்ட்டில் ராகுல் காந்திக்கும் பிரியங்கா காந்திக்கும் திடீர் 'சண்டை'.. வைரல் வீடியோ கான்பூர் ஏர்போர்ட்டில் ராகுல் காந்திக்கும் பிரியங்கா காந்திக்கும் திடீர் 'சண்டை'.. வைரல் வீடியோ

விஷால் தலைமையிலான நிர்வாகக் குழு தந்த விளக்கம் ஏற்கத்தக்கதாக இல்லை என்பதால், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் தேதியுடன் விஷால் தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.

English summary
Film Producers association Scam; New officer appointment By Tamil Nadu government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X