அர்னாப் கோஸ்வாமிக்காக ஆஜரானவர்.. சீமான் வழக்கில் நாளை வாதாடப்போகும் வழக்கறிஞர்.. யார் தெரியுமா?
சென்னை: நடிகை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவுக்கு தடைக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு நாளை (மார்ச் 3) விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் சீமானுக்கு ஆதரவாக மிக முக்கியமான வழக்கறிஞர் ஒருவர் ஆஜராக உள்ளார்.
பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது எனக் கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த அந்த உத்தரவில், வழக்கை ஆராய்ந்த போது நடிகைக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை, குடும்ப பிரச்சினை திரைத்துறை பிரச்சனை காரணமாக சீமானை அந்த நடிகை குடும்பத்தினர் அணுகி உள்ளனர் அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை உடன் சீமான் உறவு வைத்துள்ளது தெரிய வருவதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சட்டப்படி அனைவரும் அறியும் வகையில் திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியிருந்தார் என்றும் அவரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஆறு ஏழு முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், விஜயலட்சுமியிடம் பெருந்தொகையை பெற்றிருப்பதாகவும் நடிகை புகாரில் தெரிவித்துள்ளதாக உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மன உளைச்சல் காராணமாகவே புகாரை திரும்ப பெற கடிதம் அனுப்பியதாகவும் நடிகை கூறியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இதிலிருந்து மிரட்டல் காரணமாக தான், புகாரை நடிகை திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது எனத் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது. விஜயலட்சுமி, சீமான் மீது தெரிவித்த புகார்கள், அவர் அளித்த வாக்குமூலத்தில் மூலம் உறுதியாகிறது எனக் கூறிய நீதிபதி, சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
சீமான் ஆஜர்
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சீமானிடம் போலீசார் 1 மணிநேரம் 15 நிமிடங்கள் வரை விசாரித்துவிட்டு அனுப்பினர். இதற்கிடையே தான் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைக்கோரியும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நாளை இந்த வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது.
இந்த வழக்கு, ஜஸ்டிஸ் பி.வி. நாகரத்னா மற்றும் ஜஸ்டிஸ் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் முன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சீமானுக்கு ஆதரவாக மிக முக்கியமான வழக்கறிஞரான நிர்நிமேஷ் துபே ஆஜராக உள்ளார்.
பாலியல் குற்ற வழக்கில் சீமானுக்கு ஆஜராகும் நிர்நிமேஷ் துபே இதற்கு முன் ஆஜரான வழக்குகள் அர்னாப் கோஸ்வாமி வழக்கு, கிரிக்கெட் லீக் அணி ஒன்றின் வழக்கு, இன்னும் சில பாஜகவினர் தொடர்புடைய வழக்குகள் ஆகும். அர்னாப்பிற்கு அவசர அவசரமாக ஜாமீன் வாங்கி தந்தது இவர்தான். அதிக பீஸ் வாங்க கூடிய பிரீமியர் வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications