செங்கோட்டையன் இருந்தும் தடுமாறுகிறாரா விஜய்? கைநழுவும் பெரும் தலைகள்.. இது தவெகவுக்கு மைனஸா, பிளஸ்ஸா
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. காலம் காலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 கட்சிகளுக்கிடையே நடந்து வந்த போட்டி, இப்போது நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் வருகையால் புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது... ஆனால் விஜய் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்? என்று தெரியவில்லை.. தவெகவில் நடந்து வரும் ஆலோசனைகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இறுதி முடிவை விஜய் எப்படி எடுக்க போகிறார்? என்பதே எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது..
விஜய்யை பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட், கட்சி ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே மிக முக்கிய இடத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்தியதுதான்..

ஒவ்வொரு கூட்டத்திலும் விஜய் காட்டிய கூட்டம், திராவிட அரசியல் கட்சிகளையே மலைக்க வைத்துவிட்டது.. அதனால்தான், ஓபிஎஸ், டிடிவி தினகரன், டாக்டர் ராமதாஸ் சீனியர் போன்ற தலைவர்களின் கவனம் தவெக பக்கம் திரும்பியதை மறுக்க முடியாது..
வாய்ப்பை இழக்கிறாரா தவெக விஜய்
பொதுவாக, புதிதாக தொடங்கும் ஒரு கட்சி, ஏற்கனவே உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வாக்குகளை சேர்ப்பதுதான் வழக்கம். ஆனால், டிடிவி தினகரன், ஓபிஎஸ், ராமதாஸ் போன்றோர்களுக்கு வாக்கு வங்கி ஓரளவு இருந்தும்கூட, அனுபவம் நிறைந்த இந்த தலைவர்களை விஜய் ஏன் தவெகவில் இன்னும் சேர்த்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை..
ஒருவேளை தனது கட்சியின் தனித்துவத்தை இழக்கக் கூடாது என்பதற்காக அவர் இப்படிச் செய்கிறாரா? அல்லது அரசியல் அனுபவம் இல்லாததால் எடுக்கப்பட்ட முடிவா? என்றும் தெரியவில்லை..
அதிமுக, திமுக கூட்டணிகள்
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அடிமட்டம் வரை கிளைகளை வைத்துள்ளன. மேலும் பலமான கூட்டணிகளையும் கொண்டுள்ளன. விஜய் தனது கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக சொன்னாலும், இதுவரை எந்த பெரிய கட்சியும் அவரோடு இணையவில்லை. ஒரு சிறிய கட்சியைக் கூட இதுவரை கவர முடியாமல் இருப்பது வியப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது..
மேற்கண்ட கட்சிகள் விஜய்க்காக காத்திருந்தும், அதனை விஜய் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதே இதுவரை நடந்துள்ள உண்மை.. எனினும், தேர்தல் களத்தில் தவெக தனிமையை நோக்கி செல்வதாகவே தெரிகிறது.. அதாவது தனித்து போட்டி என்ற முடிவை விஜய் எடுக்க போவதாக தகவல்கள் கசிகின்றன..
பெண்கள் ஓட்டு
அதுமட்டுமல்ல, சீமான், கமலை போல, பெண் வேட்பாளர்களுக்கும் அதிக முக்கியத்துவம் தர நினைக்கிறாராம்..
வழக்கமாக ஜெயலலிதா இருந்தவரை, பெண்கள் ஓட்டு என்றாலே அது பெரும்பாலும் அதிமுகவுக்கே சென்றடைந்தது.. இந்த பெண்கள் ஓட்டை மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களால் திமுக தன் பக்கம் இழுத்து வைத்துள்ளது.. இதைதான் விஜய் குறி வைக்கிறாராம். இதனால் திமுக, அதிமுக இரு தரப்புக்குமே சிக்கல் வரலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..
கட்சியின் அடையாளம்
எனினும் கட்சியின் அடையாளம் போய்விடக்கூடாது என்பதற்காக விஜய் தனித்துப் போட்டியிடும்போது ரிஸ்க்கான முடிவு என்றும் சொல்கிறார்கள்.. இதனால் போதிய வாக்குகள் கிடைக்காவிட்டால் அது கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்கும்..
மூத்த தலைவர் செங்கோட்டையன் போன்றோர் உடனிருந்தும்கூட, அமமுக, வைத்திலிங்கம் உள்ளிட்டோரை தவெகவுக்குள் கொண்டு வர முடியாமல் போனதும் எதிர்பார்க்காத ஒன்றுதான்..
தனித்து போட்டி பிளஸ்? மைனஸ்?
தனித்து நிற்பது கட்சியின் தனித்துவத்தையும் நேர்மையையும் மக்கள் மத்தியில் உயர்த்திப் பிடிக்கும் அதே வேளையில், அனுபவம் வாய்ந்த தலைவர்களின் வாக்கு வங்கியைத் தவிர்ப்பது வெற்றிக்கான இலக்கை எட்ட முடியாத தூரத்திற்கு தள்ளிவிடக்கூடும்..
இப்படித்தான் தேமுதிக போன்ற கட்சிகள் ஆரம்பத்தில் பெரும் அலையை அன்றைய காலங்களில் உருவாக்கினாலும், சரியான கூட்டணி கணக்குகள் இல்லாதபோது வாக்குச் சிதறலால் வெற்றியை நழுவவிட்டன.. தவெகவும் அப்படியொரு வாக்குச் சிதறல் என்ற காரணியாக மாறிவிடுமோ? என்ற சந்தேகமும் பரவலாக எழுகிறது..
இந்த வாக்கு சிதறலுக்கு விஜய்யே வழிவகுத்து, எதிரணிக்கு சாதகமாக முடியவும் வாய்ப்புள்ளது... விஜய் யோசிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்!











Click it and Unblock the Notifications