ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு
சென்னை: ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தவாறே டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா அதிகரித்து வருவதால் ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க காலவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆயுள் சான்றிதழ், வேலையின்மை சான்றிதழ், திருமண தொடர்பான சான்றிதழ் போன்றவற்றை ஓய்வூதியதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, ஆயுள் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை ஒவ்வொரு மாதமும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் ஏதேனும் ஒரு மாதத்தில் சமர்ப்பிக்கலாம்.
அப்படி ஜூன் 30ஆம் தேதிக்குள் இவற்றை சமர்ப்பிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர் ஜூலை மாதத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும். ஜூலை மாதத்திலும் சமர்ப்பிக்காவிட்டால் பென்சன் தொகை வழங்கப்படமாட்டாது. வருடாந்திர சமர்ப்பிப்பில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்காமல் விட்ட பென்சனர்கள் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சமர்ப்பிக்கலாம்.
அப்படி சமர்ப்பிக்காதவர்கள் அக்டோபர் மாதத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். அதையும் தாண்டி சமர்ப்பிக்காவிட்டால் பென்சன் கிடைக்காது. அதேபோல ஜீவன் பிரமான் போர்ட்டல் மூலமாக ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க 2021 ஜூலை முதல் 2021 டிசம்பர் வரையில் அவகாசம் வழங்கப்படுகிறது. நேரில் வந்து சமர்ப்பிப்பதில் முதியோர்களுக்கு சிரமம் இருப்பதால் இ-சேவை மையங்களில் சமர்ப்பிக்கலாம். கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications