தாம்பரம் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி ஈஸியாக போகலாம்.. நேற்றே நடந்த சூப்பர் மாற்றம்
சென்னை: சென்னை தாம்பரத்தில் கிழக்கு தாம்பரம் மற்றும் மேற்கு தாம்பரத்தை இணைக்கும் சுரங்கப்பாதை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சென்னையில் உள்ள மக்களுக்கு ரயில் பாதைகள் எந்த அளவிற்கு வரம் என்று வார்த்தைகளால் கூறிவிட முடியாது. ஆனால் ரயில் பாதைகளில் அருகில் இருக்கும் மக்களுககு அதை கடக்க சரியான பாதை இல்லாமல் போனால் அது நிச்சயம் பெரும் சுமைதான்.. அப்படித்தான் தாம்பரம் பகுதி மக்கள் தவித்து வந்தார்கள்.

தாம்பரத்தை இரண்டாக ரயில் தண்டாவளம் பிரிக்கிறது. ரயில் தண்டாவளத்தின் கிழக்கு பக்கம் உள்ள பகுதி கிழக்கு தாம்பரம் ஆகவும், தண்டவாளத்தின் மேற்கு பக்கம் உள்ள பகுதி மேற்கு தாம்பரம் ஆகவும் உள்ளது. இதில் துரதிஷ்டவசமான விஷயம் என்னவென்றால், தாம்பரம் ரயில் நிலையத்தின் வழியாக ஏறினால் மட்டுமே மேற்கு மட்டும் கிழக்கு தாம்பரத்தின் பகுதிகளுக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.
வேறு எந்த பாதையும் கிடையாது. தாம்பரத்தை பொறுத்தவரை தாம்பரத்தின் கிழக்கு பகுதியில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. அங்கு போய் படிக்க முடியும் என்ற நிலை உள்ளது. பேருந்து நிலையங்களுக்கு செல்ல மேற்கு தாம்பரத்திற்கு மக்கள் வர வேண்டும். இது தான் எதார்த்தம்.
இந்நிலையில் கிழக்கு, மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டபோது, ரயில்வே தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்ல எந்த வசதியும் செய்யாமல் அமைத்துவிட்டாரகள். தற்போது வரை கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாலம் வழியாக, கணபதிபுரம் உள்ளிட்ட கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நடந்து சென்று வருகிறார்கள்.
பள்ளி மாணவ-மாணவிகள் ரயில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து வருகிறார்கள். சில நேரங்களில் தண்டாவளங்களை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறப்பதும் நடக்கிறது. இதனால் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல வசதியாக, சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும் என, கோரிக்கை ஏழுந்தது. அதை ஏற்று ரயில்வே நிர்வாகம் ரூ.3 கோடியே 20 லட்சம் செலவில் ரயில்வே மேம்பாலம் அருகில், கிழக்கு தாம்பரத்தில் இருந்து மேற்கு தாம்பரம் செல்ல சுரங்கப்பாதை அமைத்தது.
ஆனால், துரதிஷ்டவசமாக இந்த பாலம்ஜி.எஸ்.டி. சாலையை கடக்கும் வகையில் ௮மைக்கப்படவில்லை. இதனால், மக்கள் ௮ந்த சுரங்கப்பாதையை சரிவர பயன்படுத்த முன்வராமல் விட்டுவிட்டார்கள். இதனால் அந்த சுரங்கப்பாதையானது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. பொதுமக்கள் மேற்கு தாம்பரம் செல்ல சுரங்கப்பாதையை பயன்படுத்த தொடங்கினர். மக்கள் தேவையை கவனத்தில் கொண்டு சுரங்கப் பாதை அமைக்கப்படவில்லை என்ற புகார் இன்றுவரை உள்ளது.
மக்கள் சில காலம் மட்டுமே பயன்படுத்திவிட்டு அதில் செல்வதை அப்படியே புறக்கணித்தனர். இதனால் அந்த சுரங்கப்பாதை மூடப்பட்டது.
3 ஆண்டுக்கு மேலாக பயன்பாடு இல்லாமல் கிடந்தது. இதனால் மீண்டும் ஆபத்தான வகையில் தண்டவாளத்தை கடக்கும் சூழல் தாம்பரம் பகுதியில் ஏற்பட்டது.
இந்நிலையில் மூடப்பட்ட சுரங்கப்பாதையை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர. அதை ஏற்று சுரங்கப்பாதையை பராமரிக்க தாம்பரம் மாநகராட்சிக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து சுரங்கப்பாதை சுத்தம் செய்யப்பட்டு புதிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் ரயில்வே சுரங்கப்பாதை நேற்று திறக்கப்பட்டது. இந்த விழாவில் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மண்டல குழு தலைவர்கள் இந்திரன், டி.காமராஜ், மாநகராட்சி கவுன்சிலர் ஜோதிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications