திராவிட மாடல் என ஒன்று இல்லை.. திமுக விமர்சித்தால் ஆளுநர் சும்மா இருப்பாரா? செல்லூர் ராஜூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிட மாடல் என ஒன்றும் இல்லை, ஏழைகளுக்கு பாதுகாப்பில்லாத தன்மையே திராவிட மாடல் என்றும் ஆளுநரை இழிவாக பேசினால் எந்த ஆளுநர் பேசாமல் இருப்பார். யாராக இருந்தாலும் அப்படித்தான் பேசுவார்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வைகை ஆற்றில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடந்தது இல்லை. நேற்று ஆழமான பகுதிக்கு போகக்கூடாது என காவல்துறை எச்சரிக்கை விடுத்து கண்காணித்து இருந்தால் இந்த துயர சம்பவம் நடந்து இருக்காது. வெறும் 250 மீட்டர்தான் உள்ளது. இதில் 3 பேர் இறந்துள்ளனர்.

There is no such thing as Dravidian model - Former AIADMK minister Sellur Raju slams

காவல்துறை என்ன கண்காணிப்பு செய்கிறது. முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கை கூடாது என்றுதான் சொல்கிறேன். இந்த ஆட்சியில் நிர்வாகம் குளறுபடியாக உள்ளது என்பதை எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார். பாஜகவும் இதையே சொல்லி வருகிறது. ஆனால், இந்த அரசு சிறப்பாக இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.

இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக தமிழக அரசு உள்ளது.. சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் அமைதி பூங்காவாக உள்ளது என ஊடகங்களில் பேசி வருகிறார். ஆனால், இந்த சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு. இனிமேல் எந்த ஒரு திருவிழாவாக இருந்தாலும் சரி கூட்ட நெரிசலாக இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் இருக்கக் கூடாது என்று நான் வலியுறுத்துகிறேன்.

ஆளுநர் கருத்தை நான் ஆதரிக்கவில்லை. ஆனால், அவரைப் பற்றி திமுகவினர் பேசுகிறார்கள். திமுகவினர் விமர்சனம் பண்ணும் போது ஆளுநர் எப்படி சும்மா இருப்பார். ஆளும் கட்சியாக திமுக உள்ளது. எதற்கெடுத்தாலும் ஆளுநரிடம் செல்ல வேண்டும். ஆளுநரிடம் தான் திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும். அப்படியிருக்கும் போது ஆளுநரை இழிவாக பேசினால் எந்த ஆளுநர் பேசாமல் இருப்பார். யாராக இருந்தாலும் அப்படித்தான் பேசுவார்கள்.

மின் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. ஒருநாளில் பலமுறை மின்சாரத்தை கட் செய்து வருகிறார்கள். உண்மையான விடியலை மக்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அமித்ஷாவை பார்க்கும் போது தென் மாவட்ட முன்னாள் அமைச்சர்களை அழைத்து செல்லவில்லை என்று கேட்கிறீர்கள்.. இதில் எந்த சர்ச்சையும் இல்லை. பொதுச்செயலாளர் விரும்பியவரை அழைத்து செல்லலாம். உங்கள் பார்வையில் அப்படி தெரிகிறது.

There is no such thing as Dravidian model - Former AIADMK minister Sellur Raju slams

எங்கள் கட்சியில் குழப்பம் வராதா என நினைக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு தென் மாவட்டம், வட மாவட்டம், மேற்கு மாவட்டம், என்ற எண்ணமே அவருக்கு கிடையாது. அனைவரும் பொதுச்செயலாளர் தான் என்று எடப்பாடி பழனிசாமி எங்களிடம் சொல்வார். இது மாதிரி ஒரு தலைவரை பார்க்க முடியுமா? திராவிட மாடல் என ஒன்றும் இல்லை, ஏழைகளுக்கு பாதுகாப்பில்லாத தன்மையே திராவிட மாடல். இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+