பிச்சை.. முரசொலி மாறன் அன்று சொன்னாரே, பொன்முடி ஓசி என்று சொன்னாரே.. கேட்கிறார் குஷ்பு
சென்னை: பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பேசும் போது எதையாவது சொல்லி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. கற்பு பற்றி கருத்து கூறி வழக்குகளை சந்தித்தார். சேரி மொழி என்று சொல்லி கொந்தளிப்பு ஏற்படுத்தினார். இப்போது ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையை தமிழக அரசு பிச்சை போடுகிறது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தான் ஏன் அப்படி கூறினேன் என்று குஷ்பு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை செங்குன்றம் பகுதியில் போதைப் பொருள் ஒழிப்புக்கான ஆர்ப்பாட்டம் பாஜக சார்பில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் புழக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்குக் கூட போதைப் பொருள் எளிதாக கிடைக்கும் நிலை தான் தமிழகத்தில் உள்ளது.

தாய்மார்களுக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் உங்களுக்கு வாக்களித்துவிடுவார்களா? இதற்கு பதிலாக நீங்கள் டாஸ்மாக்கை மூட வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக டாஸ்மாக்கை குறைப்போம் என்று தெரிவித்தார். அதே உறுதி மொழியை அளித்து தான் ஸ்டாலினும் முதல்வராக பொறுப்பேற்றார்.
தற்போது அமைச்சர் உதயநிதியும் அதே கருத்தை தான் சொல்கிறார். ஆனால் டாஸ்மாக் குறைந்ததாக தெரியவில்லை. வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்களின் அருகிலேயே டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.
பெண்களுக்கு உரிமைத் தொகை என்ற பெயரில் திமுக மாதம் ரூபாய் ஆயிரம் பிச்சை போடுவதால் உங்களுக்கு அவர்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா என்று கேட்டார் குஷ்பு. 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று குஷ்பு பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
https://twitter.com/khushsundar/status/1767360991787147705
செய்திகளில் தொடர்ந்து இருக்க உங்களுக்கு குஷ்பு தேவை, இல்லையேல், நீங்கள் தகுதியற்றவர் என்று யாரும் உங்களை இரண்டாவது பார்வைக்கு கொடுக்க மாட்டார்கள். 1982ல் அப்போதைய முதல்வர் #புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஏழைகளுக்கு வழங்கிய இலவச உணவு 'பிட்சை' என்று முரசொலி மாறன் கூறியபோது, இந்த சுயநலம் இல்லாத பாதுகாப்பற்ற குலத்தைச் சேர்ந்த யாரும் குதித்து அதைக் கண்டித்ததை நான் பார்க்கவில்லை.
ஓசியில் கொடுப்பதால்தான் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்று பொன்முடி சொன்னபோதோ நீங்கள் அனைவரும் குருடர்களாகவும், ஊமைகளாகவும், காதுகேளாதவர்களாகவும் இருந்தீர்களா?? போதைப்பொருளை நிறுத்துங்கள், டாஸ்மாக்கில் இருந்து உங்கள் கமிஷனை குறைக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன்.

டாஸ்மாக்கில் செலவழிக்கும் பணத்தை உழைக்கும் குலத்தின் மூலம் சேமிக்க நமது பெண்களுக்கு உதவுங்கள். உங்கள் பணத்தை விட குடிகாரர்களால் அவர்கள் படும் வேதனையின் அளவு அதிகம். அவர்களை சுதந்திரமாக ஆக்குங்கள், அவர்களுக்கு உங்கள் 1000 ரூபாய் தேவையில்லை. கண்ணியத்துடன் வசதியாக குடும்பம் நடத்தும் அளவுக்கு சேமிப்பார்கள்.
ஆனால், உங்கள் அடுத்த 14 தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, இந்த உலகத்தில் உள்ள மற்றவர்களை விட திமுகவுக்குப் பணம் தேவை என்று நினைக்கிறேன். எனவே உங்கள் பொய்ப் பிரச்சாரத்தை தொடருங்கள், ஏனென்றால் நீங்கள் தமிழ்நாட்டில் எப்படி தோல்வியடைந்தீர்கள் என்பதை நிரூபிக்க ஒரே வழி என்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் குஷ்பு.












Click it and Unblock the Notifications