Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளைமேட் மாறுதே.. அதிமுக தலைவர்களை விமர்சித்து பேச கூடாது! சிறுத்தைகளுக்கு திருமா போட்ட ஆர்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிட இயக்கத்துக்குள் பார்ப்பனியத்தை புகுத்தியவர் எம்ஜிஆர் என திருமாவளவன் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் எம்ஜிஆரை தாழ்த்தி பேச வேண்டுமென கருத்து தெரிவிக்கவில்லை என தனது பேச்சுக்கு விளக்கம் அளித்து இருந்தார் திருமாவளவன். இந்த நிலையில் அதிமுக தலைவர்கள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சியில் பேசக் கூடாது என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் திருமாவளவன்.

திமுக சார்பில் அம்பத்தூரில் 'போராளி ஓய்வதில்லை' என்ற தலைப்பில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்," கருணாநிதி மீதான வெறுப்பு அரசியல் தமிழ்நாட்டின் மையமாக இருக்கிறது. எம்ஜிஆர் தான் அதனை கட்டமைத்தார். அவரால் தான் திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனிய பெண் தலைவர் வந்தார்" என பேசி இருந்தார்.

Thirumavalavan Clarifies MGR Remark

திருமாவளவன்

இதை அடுத்து திருமாவளவனின் பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எம்ஜிஆர் குறித்து பேசினால் திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போவார் என எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை, எம்ஜிஆர்ஐ ஒரு சாதிக்குள் நான் சுருக்கவில்லை. நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது" என விளக்கம் அளித்திருந்தார்.

எம்ஜிஆர் ஜெயலலிதா சர்ச்சை

இந்த நிலையில் அதிமுக தலைவர்கள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சியில் பேசக் கூடாது என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் திருமாவளவன். இது தொடர்பாக வீடியோவில் பேசியுள்ள அவர்," கலைஞர் எத்தகைய சவால்களை எதிர்கொண்டார் என்பதைத்தான் நான் அந்த கூட்டத்தில் விளக்கி பேசி இருந்தேன். அது எனது தனிப்பட்ட கருத்து. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றார் கலைஞர் கருணாநிதி.

கலைஞர் கருணாநிதி

அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினர் அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்தினர். அண்ணாவையும் விமர்சித்தவர்கள் குறைவாகவே இருந்தார்கள். ஆனால் அதிகாரத்தில் இருந்து கொண்டே பெரியாரியத்தை பேசியதாலும் அண்ணாவின் அரசியலை ஆழமாக பேசியதாலும் கலைஞர் அதிகமாக விமர்சிக்கப்பட்டார். எனது பேச்சு எம்ஜிஆர் அல்லது ஜெயலலிதாவை அவமதிக்கும் நோக்கம் கொண்டது அல்ல. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள ஆணவ படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மேடையில் பேசும் அனைவரும் திருச்சி பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மட்டும் தான் பேச வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா குறித்து நான் அவமதிக்கும் வகையில் பேசியதாக பரப்பப்படும் கருத்துகளுக்கு எதிர்வினையாக கட்சித் தோழர்கள் யாரும் சமூக ஊடகங்களில் எதையும் பதிவிட வேண்டாம் . மேலும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்த அல்லது அதிமுகவின் வேறு எந்த தலைவர்கள் குறித்தோ அவர்களுக்கு பதில் அளித்த தரும் வகையில் பேசக் கூடாது. நான் பேசியது குறித்த விளக்கத்தை ஊடகங்களுக்கு தெரிவிக்க தயாராக இருக்கிறேன். தொண்டர்கள் யாரும் விளக்கம் அளிக்கவோ அல்லது எதிர்வினை ஆற்றவோ வேண்டாம்:" எனக் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+