திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்.. உறுதியாக நின்ற தமிழக அரசு.. பாராட்டிய நடிகை ரோகிணி!
சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாட்டை நடிகை ரோகிணி பாராட்டி வரவேற்றுள்ளார். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் சூழலில், மதவெறியை ஆதரிக்கும் கட்சிகள், அவர்களுக்கு துணை போகிற கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்று கூறியதோடு, தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளை ஆதரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு 144 தடை உத்தரவு அமல்படுத்தி தடுத்து நிறுத்தியது.

பின்னர் சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் சென்று தீபம் ஏற்றுமாறு உத்தரவிட்ட போது, போலீசார் மனுதாரரை மலையேறுவதற்கு அனுமதிக்கவில்லை. இதன்பின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனாலும் சட்டம் - ஒழுங்கு காரணம் காட்டி போலீசார் மலையேறுவதற்கு அனுமதி மறுத்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பின்னர் கலைந்து சென்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது.
நாடாளுமன்றத்திலும் திமுக எம்பிக்கள் குரல் கொடுத்தனர். இதனிடையே தமிழக அரசின் நடவடிக்கைக்கு முற்போக்கு அமைப்புகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநாடு நடைபெற்றது. இதில் நடிகை ரோகிணி உள்ளிட்ட கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ரோகிணி, எழுத்தாளர் ஆதவன் மற்றும் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாட்டை பாராட்டுகிறோம்.. வரவேற்கிறோம்.. சட்டசபைத் தேர்தல் நெருங்கும் சூழலில், மதவெறியை ஆதரிக்கும் கட்சிகள், அவர்களுக்கு துணை போகிற கட்சிகளை தோற்கடிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளை ஆதரிக்க வேண்டும். இந்திய அரசியல் ஜனநாயகத்திற்கு மத்திய அரசால் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications