சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது இப்படித்தான்.. இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் சொன்ன சீக்ரெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தோல்வியில் இருந்து பாடம் கற்று கொள்வதோடு கடினமாக உழைத்தால் வெற்றி நம்மைவிட்டு எங்கும் போய்விடாது என்றும், சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பேசினார்.

சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் உயர்கல்வித்துறை சார்பில் 'ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்' என்ற பெயரில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த நிகழ்சியை காண நேரலையில் காணும் வகையில் 58 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் லிங்க் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

 This is the reason behind the success of Chandrayaan 3 project, ISRO Scientist Veeramuthuvel reveal

இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் நிகழ்ச்சியை பார்த்தனர். அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இந்த நிகழ்ச்சி வரும் 6-ம் தேதி மறு ஒளிபரப்பு செய்யவும் திட்டமிட்டப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு அரங்கில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன், சந்திரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, சூரியனை ஆய்வு செய்ய விண்ணுக்கு ஏவப்பட்டுள்ள ஆதித்யா- எல்1 விண்கலம் திட்ட இயக்குனர் நிகார் ஷாஜி, சந்திரயான்-3 விண்கலத்தின் திட்ட இயக்குனர் ப. வீரமுத்துவேல் உள்பட 9 இஸ்ரோ விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, சான்றிதழும், திருவள்ளூவர் சிலையையும் வழங்கி கவுரவித்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் பேசினர். அந்த வகையில், சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பேசுகையில் கூறியதாவது:- நான் அரசு பள்ளியில் தான் படித்தேன். எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை.

எப்படி புரிந்து படிப்பது என்பதுதான் முக்கியம். படிக்கின்ற கால கட்டத்திலேயே சின்ன சின்ன புராஜெக்ட்களை செய்து பாருங்கள். செய்முறை அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். அதோடு , புது, புது தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும். சந்திரயான்-2 திட்டத்தில், தோல்வியை பார்த்து அச்சப்படகூடாது என்பதை நாங்கள் முதலில் கற்றுக் கொண்டோம். தோல்வியில் இருந்து பாடம் கற்று கொள்வதோடு கடினமாக உழைத்தால் வெற்றி நம்மைவிட்டு எங்கும் போய்விடாது.

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரையும் பிரக்யான் ரோவரையும் நிலவில் தரையிறக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மட்டுமே பணியாற்றினோம். இதற்காக நிறைய சோதனைகளை மேற்கொண்டோம். நிலவு போன்ற சூழலை பூமியில் உருவாக்கி நிறைய சோதனைகளை செய்தோம். இதுவே வெற்றிக்கு காரணம்.. வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். எந்த ஒரு பணியை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். எந்த துறையில் இருந்தாலும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+