ஜூன் 4ல் பாஜக தோற்றால்.. முதல் செக் இவங்களுக்குத்தான்! பிரஷாந்த் பூஷன் வார்னிங்.. லிஸ்டுலேயே இல்லையே
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தோல்வி அடையும் பட்சத்தில் முதல் சிக்கல் யாருக்கு ஏற்படும் என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தல் சுவாரசியமான கட்டத்தை அடைந்து உள்ளது. 2024 லோக்சபா தேர்தல் தொடக்கத்தில் 400 இடங்களை பெறுவோம் என்று பாஜக முழக்கம் வைக்க தொடங்கியது. ஆப் கி பார்.. சார்சோ பார் என்று கோஷம் போட்டது. அதாவது இந்த முறை 400 இடங்களில் வெல்வோம் என்று கோஷம் போட்டது.

பாஜக கோஷம்: ஆனால் பாஜக இப்படி கோஷமிட்டது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. 400 இடங்களை வெல்வோம் என்று அந்த கட்சியின் முழக்கம் முதல் கட்ட தேர்தலில் மிக பலத்தமாக ஒலித்தது. ஆனால் இரண்டமாக கட்ட பிரச்சாரம் எதிலும்.. மூன்றாம் கட்ட பிரச்சாரத்திலும் அந்த சத்தம் கேட்கவே இல்லை.
உதாரணமாக மோடி கடைசியாக செய்த மூன்று பிரச்சாரத்திலும் 400 என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதை மட்டுமே கூறினார். மாறாக இலக்கு 400 என்பதை அவர் எங்குமே குறிப்பிட்டு கருத்து தெரிவிக்கவில்லை.
கோஷம் இல்லை; லோக்சபா தேர்தலில் கடந்த 3ம் கட்ட தேர்தலில் இருந்து நடக்க உள்ள 7ம் கட்ட தேர்தல் வரை எங்கும் பிரச்சாரத்தில் பாஜக 400 இலக்கு என்பது தொடர்பான சார்சோ பார் கோஷத்தை எழுப்ப வில்லை;.
பாஜகவின் 400 இலக்கு அந்த கட்சிக்கே எதிராக திரும்பி உள்ளது. இடஒதுக்கீட்டை பாஜக நீக்கும், இறையாண்மைக்கு எதிராக அரசியல் சாசனத்தை பாஜக மாற்றும் என்றெல்லாம் மக்கள் இடையே எதிர்ப்பு வந்தது. அதோடு இல்லாமல் எதிர்கட்சிகளுக்கு பலம் இல்லை என்றால் பாஜக நினைத்ததை எல்லாம் செய்யும். அது மக்களுக்கே எதிராக செல்லும் என்று மக்கள் இடையே அச்சம் எழுந்தது.
அதோடு பாஜக 400 இடங்களை வெல்ல வாய்ப்பே இல்லை என்றும் கணிப்புகள் வர தொடங்கின. இதன் காரணமாக தற்போது பாஜக 400 இலக்கு என்பதற்கான சார்சோ பார் கோஷத்தை எழுப்புவதை நிறுத்தி உள்ளது. மோடியே நான் விளையாட்டுக்கு எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை குழப்ப அப்படி பேசினேன் என்றெல்லாம் மோடி கூறினார். அதோடு 370 என்ற கோஷத்தையும் பாஜக எழுப்பவில்லை.
மேலும் அரசியல் ஆராய்ச்சியாளர் யோகேந்திர யாதவ், தற்போதைய அரசியல் நிலவரப்படி பாஜக 250க்கும் குறைவான இடங்களையே பெறும்.. இறுதிக்கட்டத்தின் போது உ.பி. மற்றும் பீகாரில் இருந்து கடைசியாக பாஜக எதிர்ப்பு வாக்குகள் அதிகம் ஆகும் பட்சத்தில் பாஜகவிற்கு மட்டுமல்ல என்டிஏவுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். என்டிஏவை விட இந்திய கூட்டணி அதிக இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும், என்றெல்லாம் ஆருடம் சொல்ல தொடங்கி உள்ளனர்.
பாஜக மெஜாரிட்டி: இப்படிப்பட்ட நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தோல்வி அடையும் பட்சத்தில் முதல் சிக்கல் யாருக்கு ஏற்படும் என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மோடிக்கு ஆதரவாக இருக்கும் Godi மீடியா என்று அழைக்கப்படும் வட இந்திய ஊடகங்கள் மிகப்பெரிய தாக்கத்தை சந்திக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
ஜூன் 4-க்கு பிறகு, Godi மீடியாக்களும், அதன் தொகுப்பாளர்களும், ஆசிரியர்களும் மிகப்பெரிய தாக்கத்தை சந்திக்க நேரிடும். ஒருமைப்பாட்டின் உட்கருத்தை அவர்கள் எப்போதோ சிதைத்துவிட்டனர். தேர்தல் முடிவிற்கு பிறகு அவர்களின் அதிகாரமும், பணமும் சேர்ந்து சிதைய இருக்கிறது என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் எச்சரித்துள்ளார்.
பாஜக தோல்வியை உணர்ந்து விட்டது. அதனால்தான் பல துறைகளுக்கு அவசர அவசரமாக பணி நீட்டிப்பு செய்கிறது. அவசர அவசரமாக நியமனங்களை மேற்கொள்கிறது. தோல்வி வரப்போவதை உணர்ந்தே பாஜக இப்படி செய்கிறது என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் எச்சரித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications