என்ன தம்பி இதுவே பெரிய ஊழலா இருக்கே! அண்ணாமலையை சீண்டுகிறாரா பாஜக எஸ்.வி சேகர்? கவனிச்சீங்களா?
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பாஜக நிர்வாகி எஸ்வி சேகர் கடுமையான விமர்சனங்களை செய்து உள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம்தான் தற்போது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் டிரெண்டிங் டாப்பிக். அவர் கையில் கட்டி இருக்கும் பெல் அண்ட் ராஸ் நிறுவனத்தின் ரபேல் வாட்ச் இந்திய மதிப்பில் 4.40 லட்சம் ரூபாய் கொண்டது.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டு நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்தார். திமுகவினரின் சொத்து பட்டியல்கள் என்று குறிப்பிடப்படும் எக்ஸல் சீட் ஒன்றை அவர் வெளியிட்டார்.
தனது ரபேல் வாட்சுக்கான பில் ஒன்றையும் அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டினார். இதை அண்ணாமலை வாங்கியது எப்படி? என்ற கேள்வியைத்தான் திமுகவினர் முன் வைத்து வருகின்றனர். அண்ணாமலை வாங்கிய பில்லை பொதுவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று திமுகவினர் அண்ணாமலைக்கு பிரஷர் போட்டு வருகின்றனர்.
இதையடுத்தே அண்ணாமலை பில் ஒன்றை காட்டினார். ஆனால் அதுவும் பில் கிடையாது. அது வெறும் ரெஸிப்ட்தான். இந்த பேட்டியில் பேசிய அண்ணாமலை.. நான் வசிக்கும் வீட்டிற்கு என் நல்லுள்ளம் கொண்ட நண்பர்கள்தான் வாடகை கொடுக்கிறார்கள்.

மாதம் மாதம் அவர்கள் கொடுக்கும் வாடகையில் தான் நான் வசித்து வருகிறேன். அவர்களின் உதவியால்தான் நான் வீட்டில் வசித்துக்கொண்டு இருக்கிறேன் என்று கூறினார் . இதை திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.
ஒரு அரசியல் கட்சி தலைவர் நண்பர்களின் உதவியில் வசிக்கிறேன் என்று கூறுவது காமெடியாக உள்ளது. லஞ்சம் எல்லாம் இப்போது அன்பளிப்பு ஆகிவிட்டதா? வருடம் ஒன்றரை கோடியை வாடைக்கு கொடுக்கும் அந்த நண்பர்கள் யார்?
அண்ணாமலையால் அவர்களின் பெயர்களை வெளியிட முடியுமா? தனது குடும்ப செலவுகள் அனைத்துக்கும் நண்பர்கள்தான் பணம் கொடுப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார் ஆனால் அதற்கு வரி கட்டி வருகிறாரா?

எந்த ஒரு பொருளையோ சேவையையோ வழங்காமல் பெறப்படும் பணம் இந்திய வருமானவரி சட்டப்படி "அன்பளிப்பு" என்ற கணக்கில் வரும். இந்திய சட்டப்படி அதற்கு வருமான வரி செலுத்த வேண்டும். அண்ணாமலை வரி செலுத்தினாரா? என்று நெட்டிசன்கள் பலரும் கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்தான், அண்ணாமலை குறித்து பாஜக நிர்வாகியின் எஸ்வி சேகர் கடுமையான விமர்சனங்களை செய்து உள்ளார்.
அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் எஸ்.வி சேகர் போஸ்ட் செய்துள்ளார். அதில், சட்டம் என்ன சொல்கிறது⁉️. ரத்த சம்மந்த உறவுகளை தவிர யார் பணமாக உதவி செய்தாலும் வருமானவரி கட்ட வேண்டும். ஏதாவது பழைய பொருள் வாங்கினாலும் ₹19 ஆயிரத்துக்கு மேல் பணமாக குடுக்கக்கூடாது. ₹10L x 12=. ₹ 1.2 crores. இதுவே பெரிய ஊழலா இருக்கே. I T தம்பி இது என்னன்னு விசாரி.

லட்ச ரூபாயில் அடுத்தவன் காசில் அமோகமாக வாழ்பவனை விட ஆயிரம் ரூபாய் சொந்த காசில் வாழ்பவனே மானஸ்தன். நேர்மையானவன். தலைமைக்கு தகுதியானவன். ஜெய்ஹிந்த்., என்று எஸ்.வி சேகர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இதில் எஸ்வி சேகர் எங்கும் அண்ணாமலை பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications