நாளை சென்னை போறீங்களா? நெல்லை - செங்கல்பட்டு இடையே நாளை சிறப்பு ரயில்.. முன்பதிவு ரொம்ப ஈஸி
சென்னை: 3 நாள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வந்துள்ளனர். இவர்கள் மீண்டும் சென்னை நோக்கி செல்ல வசதியாக திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டுக்கு நாளை (அக்டோபர் 13) சிறப்பு ரயில் என்பது இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவும் தொடங்கி உள்ளது.
நேற்று சரஸ்வதி பூஜை. இன்று விஜயதசமி கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையாகும். இப்படி தொடர்ந்து 3 நாள் விடுமுறை என்பதால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் வேலை செய்து வந்த தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த 10ம் தேதி புறப்பட்டு வந்தனர்.

நேற்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடினர். இன்று விஜயதசமியை குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர். பலரும் கோவில்களுக்கு சென்று வருகின்றனர். இவர்களில் பலரும் நாளை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சென்னை நோக்கி புறப்பட உள்ளனர். இதனால் பஸ் மற்றும் ரயில்களில் நாளை கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில் தான் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என்பதற்காக தெற்கு ரயில்வே சார்பில் இருமார்க்கமாக திருநெல்வேலி - செங்கல்பட்டு வாராந்திர பூஜை கால சிறப்பு ரயில் (வண்டி எண்: 06003/06004) இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 3 நாள் விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு நாளை சென்னை திரும்புவோருக்கு இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த சிறப்பு ரயில் என்பது நாளை திருநெல்வேலியில் இருந்து புறப்பட உள்ளது. அதன்படி நாளை மாலை 5.40 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06003) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து அக்டோபர் 14ம் தேதி மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06004) மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.
இந்த ரயில்கள் இருமார்க்கமாக கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டிக்கல், மணப்பாறை, திரசு்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி உள்ளன. பொதுமக்கள் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த ரயிலில் இரண்டடுக்கு ஏசி பெட்டி ஒன்று, மூன்றடுக்கு ஏசி பெட்டி 2, 10 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டி, 3 பொதுப்பெட்டி, 2 லக்கேஜ் கம் பிரேக் வேன்ஸ் + மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி என்பது இருக்கும். என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications