Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாசலில் "கோலம்" போட்ட அம்சா.. கரெக்ட்டா வந்த பாய்பிரண்ட்.. வீட்டிற்குள் ஒரே அலறல்.. பாவம் எழுமலை..!

மாமியாரை கொன்ற மருமகளையும், அவரது நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடச் சொன்னதற்காக மாமியாரை கொலை செய்திருக்கிறார் மருமகள். திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம் .

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது புதூர் என்ற பகுதி. இங்கு வசித்து வந்தவர் செல்வராஜ்... இவரது மனைவி பெயர் ராணி... இவர்களின் மகன் ஏழுமலை.

செல்வராஜ் ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.. தங்கள் மகளுக்கு, அம்சா என்ற பெண்ணை பார்த்து இவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்..

 பெண் குழந்தை

பெண் குழந்தை

இந்த தம்பதிக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இவர்கள் எல்லாருமே கூட்டு குடும்பமாக வசித்து வந்திருக்கிறார்கள்... இந்த நிலையில் கடந்த 29ம் தேதி, செல்வராஜ் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டார்.. வீட்டில் வராண்டாவில் ராணியும், பெட்ரூமில் அம்சாவும் தூங்கி கொண்டு இருந்தனர்.. அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, ராணி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.. இதை பார்த்து அம்சா அலறி துடித்து சத்தம் போட்டு இருக்கிறார்.

தகவல்

தகவல்

அந்த சத்தத்தை கேட்டு, பக்கத்து வீட்டினர் ஓடி வந்திருக்கிறார்கள்... ரத்த வெள்ளத்தில் கிடந்த ராணியின் உடலை கண்டு கதறினர்.. உடனடியாக போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.. போலீசாரும் விரைந்து வந்து, ராணியின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்... பிறகு கொலை குறித்து, வழக்கு பதிவு செய்து, விசாரணையையும் ஆரம்பித்தனர்.. முதல் விசாரணையே அம்சாதான்.

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

விசாரிக்க துவங்கும்போதே அம்சா உளற ஆரம்பித்தார்.. முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னார்.. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், அம்சாவின் செல்போனை எடுத்து ஆய்வு செய்தனர்.. அப்போது, குறிப்பிட்ட ஒரு நபருக்கு மட்டும் அடிக்கடி அம்சா போன் செய்தது தெரியவந்தது.. அந்த நபர் யார் என்று அம்சாவிடம் போலீசார் துருவி துருவி விசாரணையை மேற்கொண்டனர்.. கடைசியில் அவர் அம்சாவின் பாய்பிரண்டாம்.. அவருடன் சேர்ந்துதான், மாமியாரை கொன்றதாக ஒப்புக் கொண்டார்.

ஏழுமலை

ஏழுமலை

அம்சா, குறிச்சிமேடு என்ற கிராமத்தை சேர்ந்தவராம்.. ஸ்கூல் படிக்கும்போதே, கார்த்திகேயன் என்ற இளைஞரை காதலித்து வந்திருக்கிறார்... ஆனால், வீட்டில் பெற்றோர், திடீரென்று ஏழுமலைக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டனராம்.. இப்போது ஏழுமலை சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.. அதனால் மாமியார், மாமனாருடன் அம்சா வசித்து வந்துள்ளார்.. ஏழுமலை ஊரில் இருக்கவும், அம்சா, அடிக்கடி கார்த்திகேயனுடன் போனில் பேசி உள்ளார்.. எந்நேரமும் அம்சா போனில் இருப்பதை கண்ட, மாமியார் ராணி மருமகளை கண்டித்திருக்கிறார்.

 கோலம் - வாசல்

கோலம் - வாசல்

இரவெல்லாம் போனில் பேசிவிட்டு, அம்சா லேட்டாகத்தான் தூங்கி உள்ளார்.. அதனால் காலையில் லேட்டாகவே எழ முடிந்துள்ளது.. தினமும் காலையில் தாமதமாக எழுந்ததால், வீட்டு வாசலில் கோலம் போட முடியவில்லை.. விடிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் சாணி தெளித்து கோலம் போட மாட்டியா? என்று ராணி அம்சாவை திட்டியிருக்கிறார்... அதனால், அன்று கோபத்தில் கோலம் போட்டுள்ளார் அம்சா..

 மாமியார்

மாமியார்

ஆனால், கார்த்திகேயனுடன் பேச முடியாமல் போனது.. இதுதான் அம்சாவுக்கு ஆத்திரத்தை தந்துள்ளது. அதனால், கார்த்திகேயனை சம்பவத்தன்று வரச்சொல்லி, மாமியாரை கட்டையால் அடித்து, பிறகு கழுத்தையும் நெரித்து கொலை செய்திருக்கிறார்... இவ்வளவும் போலீசில் அம்சா வாக்குமூலமாக சொன்னதையடுத்து, இந்த ஜோடி ஜெயிலுக்குள் உள்ளது.. அம்மா கொலை செய்யப்பட, மனைவி ஜெயிலுக்குள் இருக்க, குடும்பத்துக்காக உழைக்க, வெளியூருக்கு சென்ற ஏழுமலை நிலைமை பரிதாபம்தான்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+