சக்ஸஸ்.. ஸ்டாலினின் கனவு திட்டத்திற்கு கிடைத்த உடனடி பலன்.. காலை உணவால் உயர்ந்த பள்ளி அட்டென்டன்ஸ்!
காலை உணவு திட்டம் தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் காரணமாக பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரித்து உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல்முறையாக காலை உணவு திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட உள்ளது.
முதலில் ஸ்டாலினின் கனவு திட்டங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் அனைத்து வகுப்புகளுக்கும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயலி
பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு உள்ள காலை உணவு திட்டத்தை கண்காணிக்க தமிழ்நாடு அரசு சார்பாக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சி.எம்.13.எப்.எஸ் என்று இந்த செயலிக்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த செயலி மூலம் உணவு நேரத்திற்கு வழங்கப்படுகிறதா, மெனு சரியாக பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க முடியும். முக்கியமாக இந்த திட்டத்தில் காலை 7.45 மணிக்குள் சமையல் பணிகள் முடிக்க வேண்டும். இதையும் இந்த ஆப் மூலம் கண்காணிக்க முடியும். இந்த திட்டம் மூலம் நேரடியாக ஒரு லட்சத்து 14,095 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

செலவு
மொத்தம் ரூ.33.56 கோடியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்னோடி. சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே நீதிக்கட்சி மூலம் சென்னையில் மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டது. பிற மாநிலங்கள் மதிய உணவு திட்டத்திலேயே இன்னும் முழுமை பெறாத நிலையில்தான் தமிழ்நாடு அரசு காலை உணவு திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறது . கடந்த வருடம் மே மாதம் 7ம் தேதி இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார். முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராமப் பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,543 அரசு தொடக்கப் பள்ளிகளில் 37 மாவட்டங்களில் இந்த திட்டம் இன்று செயல்பட்டது.

தமிழ்நாடு
தற்போது தமிழ்நாடு முழுக்க இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட 1,543 பள்ளிகளில் 1,319 பள்ளிகளிள் மாணவ, மாணவியர் வருகை பதிவேடு அதிகரித்து உள்ளது. மாநில திட்டமிடல் துறை சார்பாக எடுக்கப்பட்ட சர்வேயின் கீழ் இந்த தகவல் வெளியாகி உள்ளது. திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் வருகை 100 சதவீதம் உள்ளது. அதிலும் கவனிக்க வேண்டிய விஷயம் 1,086 பள்ளிகளில் வருகை 20% வரை அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் 22 பள்ளிகளில் 40% அளவிற்கு வருகை பதிவேடு உயர்ந்துள்ளது. இந்த திட்டம் மூலம் ஒரு மாணவருக்கு ₹12.71 ரூபாய் வரை ஒருநாளுக்கு செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

என்ன உணவு
பல்வேறு விதமான சிற்றுண்டி வகைகளில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டுள்ள நாட்களில் வழங்க வேண்டும். திங்கட்கிழமையில் உப்புமா வகை. ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார் அல்லது சேமியா உப்புமா உடன் காய்கறி சாம்பார், கோதுமை ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார். செவ்வாய்க்கிழமையில் கிச்சடி வகை. ரவா கிச்சடி சேமியா காய்கறி கிச்சடி அல்லது சோள காய்கறி கிச்சடி அல்லது கோதுமை ரவா காய்கறி கிச்சடி புதன்கிழமை பொங்கல் வகை, ரவா பொங்கல் உடன் காய்கறி சாம்பார் அல்லது வெண் பொங்கல் உடன் காய்கறி சாம்பார். வியாழக்கிழமையில் சேமியா வகை: சேமியா உப்புமா உடன் காய்கறி சாம்பார் அல்லது அரிசி உப்புமா உடன் காய்கறி சாம்பார் அல்லது ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார், கோதுமை ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார் கொடுக்க வேண்டும். வெள்ளிக்கிழமை ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் செவ்வாய்க்கிழமை உணவு வகையின்படி ரவா கேசரி சேமியா கேசரி வழங்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications