சர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு
சென்னை: சர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாலான மக்கள் ரூ. 1000-த்தை வாங்கிவிட்டனர் நிலையில் கஜா புயல் நிவாரண பணிகள் இன்னமும் முழுமையாக சென்றடையாத நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவதற்கு கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

பச்சை நிற கார்டு
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசின் அறிவிப்புக்கு கட்டுப்பாடு விதித்தனர். அதாவது பச்சை நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே ரூ. 1000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தமிழக அரசு முறையீடு
ஏற்கெனவே பாதி பேர் வாங்கி விட்ட நிலையில் எங்களுக்கு மட்டும் தடையா என ஆங்காங்கே மக்கள் கொந்தளிக்க தொடங்கினர். உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி தமிழக அரசு முறையீடு செய்தது.

10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறுகையில் சர்க்கரை பெறும் NPHH-S கார்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தின் தடையால் 10 லட்சம குடும்ப அட்டைதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விசாரிக்க முடியாது
எனவே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரியது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும் அரசின் முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்து விட்டனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications