“மாநில சிலபஸ் தரம் மோசமா இருக்கு”.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆளுநர் ரவி!
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தை விமர்சித்துப் பேசியுள்ளார். தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது. மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றில் அறிவுத்திறன் குறைவாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ஆளுநர் ரவி.
இன்று தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசினேன். மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றில் அறிவுத்திறன் குறைவாக உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும். தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது” என்று கூறியுள்ளார் ஆளுநர் ரவி. ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு கடுமையான எதிர்வினைகள் எழுந்துள்ளன.
ஏற்கனவே, தமிழ்நாடு கல்வித்துறையை பல்வேறு தருணங்களில் விமர்சித்துப் பேசியுள்ளார் ஆளுநர் ரவி. தமிழகத்தில் ஆண்டுக்கு 1,500 மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுகிறார்கள். அதில் 5 சதவிகித மாணவர்களே திறன் மிக்கவர்களாக இருக்கின்றனர் என முன்பு பேசி இருந்தார் ஆளுநர் ரவி.
அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களான ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, நானோ தொழில்நுட்பம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் பின்தங்கி விடுவோம்.
மாணவர்கள் மத்தியில் உயர் கல்வி, வேலை வாய்ப்பு, எதைப் படிக்க வேண்டும் என்பது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. கல்வியாளர்கள் மாணவர்களை வழிநடத்த வேண்டும். மத்திய அரசின் செயல் திட்டங்கள் சிறப்பாக உள்ளன. மாணவர்களை சரியான வழியில் வழி நடத்த வேண்டும்” எனப் பேசியிருந்தார் ஆளுநர் ரவி.
திமுக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் ஆளுநர் ரவி. எனினும், அண்மையில் நடந்த சுதந்திர தின விழாவுக்கு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் அரசு சார்பாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த டீ பார்ட்டியில் ஆளுநருடன் சிரித்துச் சிரித்துப் பேசினார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில் தற்போது மீண்டும் தனது பேச்சால் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications