Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழைய வீடு, மனை வாங்க போறீங்களா.. பதிவுத்துறை வெளியிட போகும் முக்கிய அறிவிப்பு.. ரெடியாக இருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை : ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் விற்காமல் உள்ள மனைகளுக்கு மட்டுமே, இந்த ஓ.எஸ்.ஆர்., கட்டணம் அமலாகும் என்று கூறப்படுகிறது. இதனால் அங்கீகாரமில்லாத மனைகளுக்கு, புதிய கால வரம்பு அடிப்படையில், ஓஎஸ்ஆர் கட்டணங்களை வசூலிப்பதில் குழப்பமான நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளுக்கு பத்திரம் பதிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளில் கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதி கேட்டு பலரும் விண்ணப்பிக்கிறார்கள். இவற்றை வரன்முறைப்படுத்த முடியாத நிலை இருப்பதால் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலத்துக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்பின்னரே கட்டிடம் கட்ட பின் அனுமதி தரப்படுகிறது.

TN govt likely release new order about collection of OSR charges for unauthorized plots

தற்போதைய நிலையில் அங்கீகாரமற்ற மனை பிரிவில் உள்ள வீடுகளில் உள்ளவர்களும் வரன்முறை படுத்தக்கோரும் நிலையில். சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ கணக்கின்படி 1972; நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி.யின் படி 1980 ஆண்டுகள் வரை உள்ள மனைகளை வரன்முறை செய்யலாம் என, கால வரம்பு நிர்ணயம் செய்தார்கள்.

அதேநேரம் 2017ல் அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அப்போது இந்த கால வரம்பை கடைப்பிடிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து 2016 அக்டோபர் 20ம் தேதிக்கு முன் பத்திரம் பதியப்பட்ட அங்கீகாரமில்லாத மனைகளுக்கு, ஓ.எஸ்.ஆர்., கட்டணங்கள் வசூலிக்கும் வகையில், கால வரம்பை மாற்றி அமைக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டிருந்ததாவது: தமிழ்நாட்டில் 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதிக்கு முன் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைகளையும், அந்த வீட்டு மனைகளுக்கு அருகேயுள்ள விற்பனை செய்யப்படாத மனைகளையும் மட்டுமே வரன்முறை செய்ய முடியும்.

இந்த நிலங்களை வரன்முறை செய்ய, இந்த அரசாணை வெளியான நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் கண்டிப்பாக விண்ணப்பம் செய்ய வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அதிகாரி, (கிராம பஞ்சாயத்துகளில் உள்ள நிலங்களுக்கு) வட்டார வளர்ச்சி அதிகாரி, சென்னை மாநகரத்தைப் பொருத்தவரை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர்-செயலாளர் ஆகியோர் வரன்முறை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் திட்டக் குழுமம், மண்டல திட்டக் குழுமம், புதிய நகர வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்டவை அதிகாரத்துக்கு உட்பட்ட அங்கீகாரம் இல்லாத நிலங்களை வரன்முறை செய்ய, அந்தக் குழுமத்தின் துணை இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

அதேநேரம் குறிப்பிட்ட நிலங்களை எந்த காரணம் கொண்டும் வரன்முறை செய்யக்கூடாது- அவை, குளம், குட்டை, ஏரி, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலம், பொது பயன்பாட்டு நிலம் (ஓ.எஸ்.ஆர்), பூங்கா, விளையாட்டு மைதானம், சுற்றியுள்ள வீட்டு மனைகளுக்கு செல்லும் பாதையை மறித்து அமைந்துள்ள நிலம், பொது சாலைகள், ரயில் பாதைகளுக்காக ஒதுக்கீடு செய்த நிலம், நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் உள்ள நிலங்கள், உயர் மின் அழுத்த கோபுரம் மற்றும் கம்பிகள் ஆகியவற்றின் கீழ் உள்ள நிலங்கள் உள்ளிட்டவற்றை வரன்முறை செய்யக்கூடாது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சாலைகள், மாநகராட்சிப் பகுதி என்றால், 4.8 மீட்டர் அகலம் கொண்ட சாலையும், பேரூராட்சி, கிராம ஊராட்சி என்றால், 3.6 மீட்டர் அகலம் கொண்ட சாலையும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நிலங்களை வரையறை செய்ய மாநகராட்சிப் பகுதிகளில், ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100, நகராட்சிப் பகுதிகளில் ரூ.60, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து என்றால் ரூ.30 என்ற வீதத்தில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் அரசாணையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுதவிர, வரன்முறை செய்யப்படும் நிலங்களை மேம்படுத்துவதற்கான கட்டணத்தையும் சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும் என்றும். ஒரு சதுர மீட்டருக்கு ரூ.600 மாநகராட்சிப் பகுதிகளிலும், ரூ.350 சிறப்பு மற்றும் தேர்வு நிலை நகராட்சிப் பகுதிகளிலும், ரூ.250 முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சிப் பகுதிகளிலும், ரூ. 150 பேரூராட்சிப் பகுதிகளிலும், ரூ.100 கிராம பஞ்சாயத்துப் பகுதிகளிலும் மேம்பாட்டுக் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

TN govt likely release new order about collection of OSR charges for unauthorized plots

இந்த நிலத்தை வரன்முறை செய்ய மேற்கொள்ளும் ஆய்வுப் பணிக்குத் தனியாக ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் நிலத்தை வரன்முறை செய்த பின்னர், அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த உத்தரவின்படி, 30 நாள்களுக்குள் அந்தத் தொகையைச் செலுத்த வேண்டும். அவற்றை செலுத்தத் தவறினால், ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் அந்த தொகை 90 நாள்களுக்குள் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

2016ம் ஆண்டு கால வரம்புக்கு முன் பதிவாகி இருந்தாலும், 2017ல் அறிவிக்கப்பட்ட வரன்முறை திட்டத்தில், விண்ணப்பித்த மனைகளுக்கு புதிய ஓ.எஸ்.ஆர்., கட்டணங்கள் பொருந்தாது என்று கூறப்பட்டது. இதனால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமான துறையினர் மத்தியில் குழப்பம் நிலவியது.

இதுகுறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு அமைச்சர் ஓ.எஸ்.ஆர்., கட்டண குழப்பம் தொடர்பாக வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமியிடம் முறையிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, '2016க்கு முன் உருவாகி இருந்தாலும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் விற்காமல் உள்ள மனைகளுக்கு மட்டுமே, இந்த ஓ.எஸ்.ஆர்., கட்டணம் அமலாகும் என்றார். அதேநேரம் தனி மனை வைத்துள்ள பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் இந்த குழப்பத்தை தெளிவுபடுத்தும் வகையில், புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் உறுதி அளித்தாகவும் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+