அடிச்சது ஜாக்பாட்..அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு 2 லட்சமாமே! வெளியான செம அறிவிப்பு..என்ன விஷயம்?
சென்னை: அரசு கேபிள்டிவியில் இணைந்து தொழில் செய்ய 25000 கேபிள்டிவி ஆபரேட்டர்களுக்கு புதிய எச்டி செட்டாப் பாக்ஸ் வாங்க 2 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 500 கோடி ரூபாய் கடன் வழங்கப்படவுள்ளது. இதனால் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் குறிப்பிட்ட சில கேபிள் டிவி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான கேபிள் சேவையை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.

தொடர்ந்து கேபிள் மூலம் சேவை வழங்கப்பட்ட நிலையில், அது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படுகிறது. மேலும், அந்த செட்டாப் பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 200க்கும் மேற்பட்ட சேனல்கள் 200 கட்டணத்தில் வழங்கப்படுகிறது.
தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஹெச்டி செட்டாப் பாக்ஸ்கள் வழங்க வேண்டும் என கேபிள் டிவி ஆபரேட்டர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து உயர் தொழில்நுட்பத்துடன் அரசு கேபிள் டிவிக்கு விரைவில் எச்டி செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில், : அரசு கேபிள்டிவியில் இணைந்து தொழில் செய்ய 25000 கேபிள்டிவி ஆபரேட்டர்களுக்கு புதிய எச்டி செட்டாப் பாக்ஸ் வாங்க 2 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குநர் வைத்தியநாதன் மற்றும் தமிழ்நாடு அரசின் கேபிள் டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா ஆகியோரின் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் கேபிள்டிவி தனி வட்டாட்சியர்கள் மற்றும் டிஏ, ஏடிஏ, ஏஎம் , டிஎஸ்டி ஆகியோருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆணைக்கினங்க அரசு சார்ந்த அனைத்து இடங்களிலும் அரசு கேபிள்டிவி ஒளிபரப்பு செய்வதை உறுதி செய்ய வேண்டும் , ஒரு சில டிஎஸ்டி அரசு இணைப்புகளை விட தனியார் கேபிள் டிவி இணைப்புகள் அதிகளவில் வைத்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. தனியார் கேபிள் டிவி இணைப்புகள் அனைத்தையும் அரசு கேபிள்டிவி இணைப்புகளாக மாற்ற வேண்டும். இல்லையெனில் புதிய டிஎஸ்டி உரிமம் வழங்கப்படுமென கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து டிஎஸ்டிகளும் அரசு கேபிள் டிவி இணைப்புகள் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
பணியில் முன்னேற்றம் இல்லையெனில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய நிர்வாகம் தயங்காது என்பதை எச்சரித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அனைவரும் இணைந்து பணியாற்றி அரசு கேபிள் டிவி இணைப்புகள் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய தமிழ்நாடு அரசின் கேபிள்டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா," கேபிள் டிவி நல வாரியத்தில் பதிவு செய்துள்ள ஆப்பரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விரைவில் அரசாங்கத்தின் அடையாள அட்டையும், பயனாளர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படும். அரசு கேபிள் டிவியில் பதிவு செய்துள்ள அனைத்து ஆபரேட்டர்களுக்கும் இரண்டு லட்சம் வரை புதிய எச்டி செட்டாப்பாக்ஸ் வாங்க வங்கி மூலம் கடன் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் குறைந்த விலையில் அதிக லாபத்துடன் அனைத்து சேனல்களையும் ஆபரேட்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கி பயன்பெற முடியும்.
தமிழக முதல்வரும் துணை முதல்வரும் கேபிள்டிவி ஆப்பரேட்டர்களின் நலனை பாதுகாக்க தொடர்ந்து தக்க ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அதனை மேலாண்மை இயக்குனருடன் இணைந்து விரைந்து செயல்படுத்தி வருவதாவும் விரைவில் அரசு கேபிள்டிவி புதிய உச்சத்தை அடைய களப் பணியாற்றியாற்றி வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications