IPS Transfer: தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. சென்னையில் இணை ஆணையர்கள் டிரான்ஸ்பர்
சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேருக்கு பதிவு உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மேற்கு, தெற்கு காவல் இணை ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

18 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்
தமிழ்நாடு அரசு காவல்துறையில் அவ்வப்போது முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்தவகையில் இன்று, தமிழ்நாடு முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது
இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தலைமையக டிஐஜி மகேஷ்குமார், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாகவும், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஜெயந்தி, சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை இணை ஆணையர்கள் மாற்றம்
சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, தமிழ்நாடு காகித ஆலை முதன்மை கண்காணிப்பு அதிகாரி டிஐஜியாகவும், சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் பேகர்லா செபாஸ் கல்யாண், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராகவும், விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராகவும் நியமிக்கப்படுகின்றனர்.
சேலம் சரக டிஐஜி உமா, விழுப்புரம் சரக டிஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு குற்ற ஆவண காப்பக எஸ்.பி. நாகஜோதி, தமிழ்நாடு சீருடை பணியாளார் தேர்வாணைய எஸ்.பியாகவும், சென்னை தலைமையக எஸ்.பி அமனத் மன், சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையத்தின் துணை ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாகை எஸ்.பி மாற்றம்
சென்னை பயிற்சி பள்ளி எஸ்.பி லாவண்யா, சென்னை குற்ற ஆவண காப்பக எஸ்.பி.யாகவும், சேலம் தலைமையக துணை ஆணையர் கீதா, சென்னை பெருநகர காவல் தலைமையக துணை ஆணையராகவும், நெல்லை நகர் மேற்கு துணை ஆணையர் கீதா, சேலம் தலைமைய துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் நகர் தெற்கு துணை ஆணையர் வேல் முருகன், சென்னை தாம்பரம் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையராகவும், சென்னை தாம்பரம் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையர் பிரபாகர், சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாகவும், நாகப்பட்டினம் எஸ்.பி.அருண் கபிலன், சென்னை தலைமையக துணை ஐஜியாகவும், குடிமை பொருள் வழங்கல் துறை மதுரை மண்டல எஸ்.பி செல்வகுமார், நாகப்பட்டிணம் எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா, பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை ஆணையராகவும், குளச்சல் ஏஎஸ்பி கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம், பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர் வடக்கு துணை ஆணையராகவும், நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னா குமார், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர் மேற்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications