அதிருப்தியில் 75 மா.செக்கள்! கலகலக்கும் ஓபிஎஸ் அணி! புலம்பும் புகழேந்தி! எடப்பாடி அணி ‘குஷி’
சென்னை: 75 மாவட்டச் செயலாளர்களை ஓபிஎஸ் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்கவே இல்லை. ஆகவே யாரும் தேர்தல் வேலை பார்க்கச் செல்லவே இல்லை என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இந்த மக்களவைத் தேர்தலில் 'இரட்டை இலை' சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று முதல் வாரம் நடந்த பத்திரிகை சந்திப்பில் ஓபிஎஸ் முழங்கினார்.

அடுத்த வாரமே இபிஎஸ், சட்டரீதியாக அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது எனச் சட்ட நடவடிக்கைகளில் இறங்கி, அதில் வெற்றியும் கண்டார்.
அப்போது உடனே ஓபிஎஸ் பக்கம் கவனம் திரும்பியது. அதிமுக சார்பில்தான் போட்டி. இரட்டை இலையை மீட்டே தீருவோம். பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
ஆனால், அப்படிப் பேசிய சில நாள்களிலேயே பாஜக கூட்டணி ஓபிஎஸை கழற்றிவிட்டுவிட்டது. அவரை பிரதமர் மோடி கூட்டத்திற்கு அழைக்கவே இல்லை. ஆகவே ஓபிஎஸ் அணியின் நிலைமை கேள்விக்குரியதாகிவிட்டது என ஊடகங்கள் எழுதின.
அதற்கும் ஒரு விளக்கம் தந்தார் ஓபிஎஸ். சரி, கட்சியின் சின்னத்தை ஓபிஎஸ் மீட்டு விடுவார் என்று தொண்டர்கள் பலரும் கடைசி நேரம் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
பலருக்கு அதிர்ச்சி தரும்படி ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஓபிஎஸ், சுயேச்சை சின்னமான பலாப் பழத்தில் நிற்கப் போவதாக அறிவித்தார். அடுத்த நொடியே அவரை இத்தனை ஆண்டுகளாக நம்பிக் கொண்டிருந்த தொண்டர்கள் தலையில் இடி விழுந்ததைப் போல் அந்தச் செய்தி இருந்தது.

இந்நிலையில்தான் தாமரை சின்னத்தையே தனது இலச்சினையாகக் கொண்ட ஒரு பத்திரிகை, புகழேந்தி தரப்பினர் ஓபிஎஸ் மீது கடும் கோவத்தில் உள்ளதாகவும், விரைவில் அவர்கள் அணியை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்றும் செய்தி வெளியிட்டது.
மேலும் எடப்பாடி எதிர்ப்பை ஓபிஎஸ் குறைத்துக் கொண்டுவிட்டார். சின்னம் கேட்டு டெல்லி வரை புகழேந்தி போய்விட்டு வந்தது ஓபிஎஸுக்குப் பிடிக்கவில்லை. புகழேந்தி தனிப் பாதையில் போகிறார். அதனால் ஓபிஎஸ் கடுப்பில் உள்ளார் என்று அந்தப் பத்திரிகை செய்தி பக்கம் பக்கமாகத் தகவலைக் கொட்டி இருந்தது.
அதற்கு ஏற்றார் போல், பாஜக கூட்டணியுடன் உள்ள ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி, ஓட்டுப் போட்டுவிட்டு வெளியே வந்து "கடவுள் பெயராலும் மதத்தின் பெயராலும் இந்த நாட்டை பிளவுபடுத்த முயற்சி செய்பவர்கள் யாரும் வெற்றி பெற முடியாது என்று சொன்னார். அவர்களுக்கு எதிராக நான் வாக்களித்திருக்கிறேன்" என்று பேசி இருந்தார்.
அது அணிக்குள் உள்ள புகைச்சலை வெளியே கொண்டு வந்தது.
இப்போது ஒரு யூடியூப் சானலுக்கு உண்மையில் ஓபிஎஸ் அணிக்குள் புகைச்சல் உள்ளதா? தான் வெளியே போவதாகச் சொன்ன செய்தி உண்மையா ஆகிய விசயங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார் புகழேந்தி.

அந்தப் பேட்டியில் அவர், "நான் பாஜகவை மதவாத சக்தி என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அப்படி யாராவது பொருள் எடுத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை. நான் திராவிட இயக்கத்தில் வளர்ந்தவன்.
அண்ணாமலை அடுத்து அதிமுக ஆட்சி வரட்டும் என்று சொல்வாரா? நான் மட்டும் எப்படி பாஜக ஆட்சிக்கு வரட்டும் என்று சொல்ல முடியும்? என் கட்சி என்னவோ அதைத்தான் நான் பேசுகிறேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசி உள்ள புகழேந்தி, "இதற்கு முன்னால் ஓபிஎஸ் திமுகவில் இணையப் போகிறார் என்று எழுதினார்கள். அப்போது மிகக் கடுமையாக அந்தப் பத்திரிகையை நான் விமர்சித்தேன்.
இப்போது என்னைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். நான் ஓபிஎஸ் அணியைவிட்டு, எடப்பாடி அணிக்குப் போகப் போவதாக அவர்களுக்கு யார் சொன்னார்கள்? இந்தச் செய்தியை ஏன் வெளியிட்டார்கள்? ஒன்றுமே புரியவில்லை.
இப்படித் தினம் தினம் ஏதாவது காமெடியாக எழுதிக் கொண்டிருந்தால் நான் என்ன செய்வது? என்ன சொல்வது?
எங்கள் அணியை ஓபிஎஸ் அணி என்றே சொல்லக்கூடாது. நாங்கள்தான் அதிமுக. உண்மையான அண்ணா திமுக நாங்கள்தான். நான் டெல்லிக்கு ஓபிஎஸிடம் சொல்லிவிட்டுத்தான் போனேன். சொல்லாமல் நான் எப்போதும் சென்றதில்லை. டெல்லியில் நான் அலைந்த கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.
நாங்கள் போய் தலைமைத் தேர்தல் அதிகாரியைப் பார்த்துவிட்டோம். உயர்நீதிமன்றத்தில் ஆர்டர் வாங்கிவிட்டோம். பல வழிகளில் எவ்வளவு முயற்சிகளை எடுக்க முடியுமோ, அத்தனை முயற்சிகளையும் எடுத்தோம்.
உடனே ஓபிஎஸ் சில வழக்கறிஞர்களை வேறு வழிகளில் விளக்கம் கேட்கிறார். அவர் கேட்டால், நான் என்ன சொல்வது? அவர் விசாரித்த வழக்கறிஞர்கள் அவருக்கு வேறு ஆலோசனை தருகிறார்கள்.

அதிமுக போட்டி அணி என்று உருவாக்கி அதன்படி 10 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால், இரட்டை இலையை முடக்கி இருப்பார்கள்.
இதை எல்லாம் நான் அவரிடம் சொல்லவில்லை. அவரிடம் இதை எல்லாம் எடுத்துச் சொல்லவும் முடியாது.
ஓபிஎஸ் என்ன செய்திருக்க வேண்டும்? அதிமுக லெட்டர் பேட்டை பயன்படுத்தி, ஒருங்கிணைப்பாளர் எனக் கையெழுத்துப் போடும் இடத்தில் 'தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு உட்பட்டது. அல்லது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது' என்று கையெழுத்திட்டு வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் கதையே வேறு.
என்னைப் பிரச்சாரத்திற்கு ஓபிஎஸ் கூப்பிடவே இல்லை. என்னை மட்டும் இல்லை மொத்தம் 87 மாவட்ட அமைப்புகள் இருக்கின்றன. அதில் கிட்டத்தட்ட 75 அமைப்புகளுக்கு மேல் அழைப்பே இல்லை. அதுதான் உண்மை.
எனக்கு எடப்பாடி கைக்கு இரட்டை இலை போய்விட்டதே என்று எனக்குக் கவலை இல்லை. ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைக்கவில்லையே என்றும் எனக்குக் கவலை இல்லை.
ஆனால், எடப்பாடிக் கைக்கு அந்தச் சின்னம் போன பிறகும் 40 தொகுதியிலும் இரட்டை இலை தோற்றுவிட்டது என்று செய்தி வரப் போகிறதே அந்த வேதனைதான் எனக்கு அதிகமாக உள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறப் போவதில்லை. ஆனால் ஓபிஎஸ் நிச்சயமாக ராமநாதபுரத்தில் ஜெயித்து விடுவார்.
ஓபிஎஸ் அணியில் என்ன இருக்கிறது? 100 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்களா? நாளை அவர்களை அழைத்துக்கொண்டு வெளியேறினால் ஆட்சி போய்விடுமா? இங்கே என்ன இருக்கிறது? கட்சி போய்விட்டது. சின்னமும் போய்விட்டது. இனிமேல் இவரிடம் என்ன இருக்கிறது?" என்று கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications