பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது? எப்படி அப்ளை செய்வது? முழு விவரம்!
சென்னை : பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூன் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 8ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதே நாளில் பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை : இதையடுத்து பல்வேறு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வரும் கல்வியாண்டிற்கான பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு 19120 இடங்கள் உள்ளன. விண்ணப்பதிவு தொடங்கியது இதில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் நேற்று தொடங்கியது.
எப்படி விண்ணப்பிப்பது? : பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்வதற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற/ 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் கல்லூரிகளில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி நாள் : விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணமில்லை. விருப்பமுள்ளவர்கள் http://www.tnpoly.in/ எனும் வலைதளம் வாயிலாக வருகிற ஜூன் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையானவை : தகுதி பெற்ற மாணவர்களுக்கான தர வரிசைப் பட்டியல், அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பாலிடெக்னிக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் 10ஆம் வகுப்பு /12ஆம் வகுப்பு / ITI மதிப்பென் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், சிறப்பு பிரிவினர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பதார் புகைப்படம் ஆகியவை தேவையான அளவுகளில் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்யவேண்டும்.












Click it and Unblock the Notifications