ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. மேஜர் நியூஸ் வெளியிட்ட தமிழக அரசு.. சென்னைவாசிகளே நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில், 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.. இதில், அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், கிலோ 25 ரூபாய் விலையில் அதிகபட்சம், 2 கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய் லிட்டர் பாமாயில் 25 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.

TN Ration card holders and Major Announcement by food supply department to Chennai

தீபாவளி: விரைவில் தீபாவளி பண்டிகை வரப்போவதால், உணவு தானியங்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. எனவே, இதுகுறித்த சிறப்பு அறிவிப்பினை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்று நம்பப்படுகிறது.

பொதுமக்களின் நன்மைக்காக இப்படி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுபோலவே, குறைதீர்ப்பு முகாம்களையும் தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது.

முகாம்கள்: இந்த முகாம்கள் மூலம், ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு உள்ள குறைகள் நேரடியாக கேட்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், இப்போதும் சென்னைவாசிகளுக்கு, நவம்பர் மாதத்துக்கான ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் உள்ளதாவது: "நவம்பர் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 18.11.2023 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகள்: குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+