வர்லாம் வர்லாம் வா.. காலையில் வெயில்.. மாலையில் மழை.. இதுதான் இனி சென்னையின் டிரென்ட்..வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை இனி வரும் காலங்களில் வானிலை எப்படியிருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தென் கிழக்கு வங்கக் கடல் அருகே அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. இதற்கு அசானி என பெயரிடப்பட்டது. இந்த அசானி புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது.

இந்த அசானி புயல் ஒடிஸா - மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்ட நிலையில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக ஆந்திரா அருகே கரையை கடந்தது.

ஆந்திரா

ஆந்திரா

இது ஆந்திரா அருகே கரையை கடந்தாலும் அங்கேயே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக மாறும் என கணிக்கப்பட்டது. இதனால் வடதமிழகம், ஆந்திரா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி கடந்த 3 தினங்களாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

குளிர்ச்சியான சூழல்

குளிர்ச்சியான சூழல்

இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இரவு நேரங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. இந்த நிலையில் இன்று காலை முழுக்க வெயில் கொளுத்தியது. இதையடுத்து சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மழை

மழை

இந்த நிலையில் இந்த மழை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் வர்லாம் வா வர்லாம் வா. இன்று காலை வெயிலுக்கு பிறகு சென்னையில் இருட்டிக் கொண்டு வரும் மழை, இனி சென்னையின் டிரென்ட் இதுதான். காலையில் வெயில் அடித்தாலும் கையில் குடையோட போங்க என வெதர்மேன் அறிவுறுத்தியுள்ளார்.

இருட்டிக் கொண்டு வரும் மழை

இருட்டிக் கொண்டு வரும் மழை

சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை இருட்டிக் கொண்டு வருகிறது. அயப்பாக்கம், தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்கிறது. அது போல் தென் சென்னையில் மழைபெய்யுமா என பாலோயர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு வெதர்மேன் ஆம் என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+