என் லைப்டைம்லயே இப்படி ஒரு மழையை பார்த்தது இல்லை.. இப்போதைக்கு விட்ற மாதிரி தெரியலை.. வெதர்மேன்
சென்னை: என் வாழ்நாளில் இப்படி ஒரு மழையை பார்த்ததில்லை என்றும் இப்போதைக்கு இந்த மழை விடுவதாக தெரியவில்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று பிற்பகல் முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. . முகப்பேர், அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, மந்தைவெளி, மயிலாப்பூர், எம்ஆர்சி நகர், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
மெரினா, மாம்பலம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சுமார் 5 மணி நேரமாக கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். இரு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே பழுதடைந்து நிற்கிறது.

மயிலாப்பூர்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மயிலாப்பூரில் மழையின் அளவு 200 மி.மீட்டரை தாண்டியுள்ளது. என் வாழ்நாளில் இப்படி ஒரு மழையை பார்த்ததே இல்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் மட்டும் பெய்த ஆண்டு மழை பொழிவை இந்த மழை முறியடித்துள்ளது.

சென்னை 2015
கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் 209 மி.மீ. மழை பதிவானது. ஆனால் இன்று 217 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை கடற்கரையோரம் அதிக மேகக் கூட்டங்கள் சூழ்ந்துள்ளன. எனவே எந்த நேரத்திலும் இந்த மழை நிற்காதது போல் தெரிகிறது. வீட்டுக்கு பத்திரமாக செல்லுங்கள்.

அதிகபட்சம் எங்கே
தி நகர், ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை தவிருங்கள் என பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார். இன்று ஒரே நாளில் எம்ஆர்சிநகரில் மழையின் அளவு 130 மி.மீ. பதிவாகியுள்ளது. அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகங்களில் தண்ணீர் உள்ளே நுழைந்துவிட்டது. இதனால் ஊழியர்கள் அலுவலக நேரம் முடிவதற்குள் வெளியேறிவிட்டனர்.

அடிக்கடி இடி ஏன்
இந்த முறை மட்டும் இடியானது தொடர்ந்து அவ்வப்போது ஏற்படுகிறதே ஏன் என்ற கேள்விக்கு வெதர்மேன் கூறுகையில் வறண்ட காற்றும் ஈரப்பதம் கொண்ட காற்றும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதால் இது போல் ஏற்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications