டைம் ஓவர்.. மின் இணைப்புடன் ஆதாரை இணைச்சிட்டீங்களா.. அவகாசம் இன்று முடிகிறது.. வெளியான முக்கிய தகவல்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிகிறது
சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிகிறது. எக்காரணம் கொண்டும், இனியும் கால அவகாசம் வழங்கப்படாது என்றும், மின் இணைப்பை ஆதாருடன் இணைக்காதோர் இன்றைக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருக்கின்றன.. மேலும், இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன.
இதில் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

வெப்சைட்கள்
மின் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தது.. எனவே, இதற்கான பணியும், கடந்த நவம்பர் 15-ந்தேதி ஆரம்பமானது.. இதற்காகவே ஸ்பெஷல் முகாம்களும் மின்சார வாரிய அலுவலகங்களில் அமைக்கப்பட்டன... வெப்சைட்கள் மூலமாகவும் ஆதார் நம்பரை இணைப்பதற்கான வசதியை மின்சார வாரியம் செய்து கொடுத்து இருந்தது... ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதியே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏராளமானோர் மின் இணைப்பு எண்ணை இணைக்காமல் இருந்தனர். அதனால், இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது..

3 நாள் கெடு
ஆனால், அப்போதும், தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் மின் நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தனர். இதனால், மறுபடியும் 15 நாட்கள் மின்சார வாரியம் டைம் தந்தது.. பிப்ரவரி 15ம் தேதி அதாவது இன்றுடன், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதுடன், ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர்கள் அதற்குள் இணைத்துவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. பிப்ரவரி 15ம் தேதிக்குப் பிறகு, இந்த அவகாசம் எக்காரணம் கொண்டு நீட்டிக்கப்படாது என்றும் மின்சார வாரியம் கண்டிஷனாக சொல்லிவிட்டது.

டைம் ஓவர்
அதன்படி மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (பிப்ரவரி 15) நிறைவடைகிறது. https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhmtl என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்தவர்கள் மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்..

செந்தில்பாலாஜி
மின்வாரிய வெப்சைட்களில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் செல்போன் நம்பரை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நுகர்வோர்கள் சரிபார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 15-ம் தேதிக்குப் பிறகு கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கெனவே அறிவித்துள்ளதால், இதற்கான அவகாசம் மேலும் தரப்படுமா? இல்லையா? என்பது இன்று தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications