அத்தனை பேர் இருக்க.. சட்டென "அவரின்" காலில் விழுந்த உதயநிதி.. யாருங்க அது? திரும்பி பார்த்த கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவில் நடந்த சம்பவம் ஒன்று திமுகவினரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. 10 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன. உதயநிதி மட்டுமின்றி பல சீனியர் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டு உள்ளன. மூத்த அமைச்சர்கள் சிலருக்கு கூடுதலாக இலாக்காக்கள் கொடுக்கப்பட உள்ளன.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 19 மாதங்கள் ஆகிறது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இன்று தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். இன்று இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் அளிக்கப்படுகிறது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

சரியாக காலை 9.30 மணிக்கு இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். உதயநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு, வெறுப்பு இன்றி அமைச்சராக செயல்படுவேன் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள ட்விட்டில், எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன், என்று கூறி உள்ளார்.

அமைச்சர் உதயநிதி

அமைச்சர் உதயநிதி

இந்த நிலையில்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவில் நடந்த சம்பவம் ஒன்று திமுகவினரை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த நிகழ்வில் கிருத்திகாவிடம் உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டு இருக்கும் போதே அவருக்கு பின்னால் வந்து ஒருவர் நின்றார். இவரை பார்த்ததும் உதயநிதி ஸ்டாலின் போய் கட்டிபிடித்துக்கொண்டார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் அப்படியே அந்த நபரின் காலில் விழுந்து வணங்கினார். இவரை மேலே எழுந்திருக்கும்படி சொல்லி, உதயநிதியின் தலையை தடவி அந்த நபர் ஆசிர்வாதம் வழங்கினார். உதயநிதி இப்படி செய்ததை அங்கு இருந்த பலரும் கவனித்தனர்.

பதவி ஏற்பு

பதவி ஏற்பு

அவர் யார் என்ற கேள்வியும் இணையத்தில் பலரிடம் எழுந்துள்ளது. இவர் தொழிலதிபர் ராஜாசங்கர். முதல்வர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ஆவார் இவர். இவர்கள் இரண்டு பேருமே குடும்ப ரீதியாக பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். 2012ல் இவர்கள் தொழிலதிபர் ராஜாசங்கர் வீட்டில் நடந்த இல்ல திருமண விழாவிற்கு ஸ்டாலின் குடும்பத்தோடு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அப்போது உதயநிதி ஸ்டாலினும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டார். அதன்பின் இரண்டு குடும்பங்களும் பல முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இருந்துள்ளனர்.

யார் இவர்?

யார் இவர்?

முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் வென்ற பின்பு கூட தொழிலதிபர் ராஜாசங்கர் இவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். குடும்ப நட்பு தாண்டி இவர்கள் வியாபார ரீதியாகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்செந்தூர் அருகே தொழிலதிபர் ராஜாசங்கருக்கு பூர்வீகம் ஆகும். ஸ்டாலினின் மிக நீண்ட கால நண்பர். இப்போது சினிமா தொழிலிலும் உதயநிதியுடன் ராஜாசங்கருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவிற்கு தொழிலதிபர் ராஜாசங்கர் வருகை புரிந்துள்ளார். இவரிடம் உள்ள நெருக்கம் காரணமாக இந்த நிகழ்விற்கு அத்தனை பேர் வந்தும் கூட தொழிலதிபர் ராஜாசங்கர் காலில் விழுந்து உதயநிதி ஆசி பெற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+