இனி எழும்பூர் இல்லை.. நவம்பர் வரை தாம்பரத்தில் இருந்து ரயில்கள் புறப்படும்.. முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், வருகிற 11-ந் தேதி முதல் சில ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே வந்து செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை, திருச்சி, ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து எழும்பூருக்கு வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638) வருகிற 10-ந் தேதி முதல் நவம்பர் 9-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் வரை மட்டுமே வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து புறப்படும். எழும்பூர் ரயில் நிலையத்திற்கு செல்லாது.பயணிகள் தாம்பரம் வந்து ரயில்களில் ஏறி செல்லலாம்.

train Egmore Tambaram

அதன்படி, எழும்பூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் ராக்போர்ட் (மலைக்கோட்டை) எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12653) வருகிற 11-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும். அதே போல, திருச்சியில் இருந்து எழும்பூருக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (12654) வருகிற 10-ந் தேதி முதல் நவம்பர் 9-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் வந்தடையும்.

மதுரையில் இருந்து எழும்பூருக்கு வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் (12638) வருகிற 10-ந் தேதி முதல் நவம்பர் 9-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் வந்தடையும். எழும்பூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் (22675) வருகிற 11-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (22661, 16751) வருகிற 11-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும். அதே போல, ராமேசுவரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (22662, 16752) வருகிற 10-ந் தேதி முதல் நவம்பர் 9-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் வந்தடையும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் எனில், மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு ஜங்சனில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16845), வரும் 30-ந்தேதி வரையில் (9,16,23,30 ஆகிய தேதிகளை தவிர எஞ்சிய நாட்கள்) திண்டுக்கல்-செங்கோட்டை இடையே பகுதி நேர ரத்துசெய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்பட்டு ஈரோடு ஜங்சன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16846), வரும் 30-ந்தேதி வரையில் (இன்று (புதன்கிழமை), 10, 17, 24 ஆகிய தேதிகளை தவிர எஞ்சிய நாட்கள்) செங்கோட்டை-திண்டுக்கல் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஈரோடு ஜங்சன் செல்லும்.

செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16848), வரும் 30-ந்தேதி வரையில் (இன்று (புதன்கிழமை), 10, 17, 24 ஆகிய தேதிகளை தவிர எஞ்சிய நாட்கள்) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்று வழித்தடம் வழியாக மயிலாடுதுறை செல்லும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, புதுக்கோட்டை, கீரனூர் ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து நாளை (வியாழக்கிழமை), 7, 11, 14, 18, 21, 25, 28 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16352), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக மும்பை செல்லும். கூடுதலாக, அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து வரும் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12666), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹவுரா செல்லும். கூடுதலாக, அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16128), வரும் 30-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தவிர எஞ்சிய நாட்கள்) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வரும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து வரும் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு ஐதராபாத் செல்லும் சிறப்பு ரயில் (07229), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹைதராபாத் செல்லும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+