இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள்.. அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.. அமைச்சர் சிவசங்கர் அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்,
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 18ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினம் தமிழக பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் மார்ச் 19இல் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், இப்போது ட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது.

சட்டசபை கூட்டத்தொடர்
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வில் துறை ரீதியிலான மணியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்றைய தினம் சட்டசபையில் போக்குவரத்துத் துறை மீதான மணிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்
அதன் பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அறிவித்துள்ளார்,

கட்டணம் இல்லை
தற்போது 3 வயது வரை கட்டணம் இல்லாமல் குழந்தைகள் பயணித்து வருகிறார்கள். இதனிடையே இனி வரும் காலத்தில் 5 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் பயணிக்கலாம் என்று அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அறிவித்துள்ளார். அனைத்து வகையான பேருந்துகளிலும் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அனைத்து பேருந்துகளிலும்
கடந்த ஆண்டு திமுக அரசு ஆட்சிக்கு வந்த போது, சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அதில் மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, நகர் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு நிலையில், இப்போது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா சென்சார்
அதேபோல பள்ளி வானங்களின் முன்புறமும் பின்புறமும் கேமரா உடன் கூடிய சென்சார்களை பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அறிவித்துள்ளார். சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு, சென்னையில் பள்ளி வாகனம் பின்புறம் இயக்கப்பட்ட போது, அதில் மோதி பள்ளிச் சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications