கேட்கவே ஷாக்கா இருக்கே! டேட்டிங் ஆப்பில் பெண்கள் மூலம் நடக்கும் மோசடி! அதிர வைத்த இன்ஸ்ட்டா ரீல்ஸ்
சென்னை: டேட்டிங் செயலிகள் மூலம் நடக்க கூடிய பெரிய மோசடி ஒன்றை பற்றி இன்ஸ்டாகிராமில் பெண் வழக்கறிஞர் ஒருவர் விளக்கி உள்ளார்.
90ஸ், 2கே கிட்ஸ்கள் இடையே சமீப நாட்களாக டேட்டிங் செயலிகள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது. டேட்டிங் ஆப்களில் பலர் சமீப நாட்களாக இணைந்து, தங்கள் வாழ்க்கை துணை அல்லது காதலை தேட தொடங்கி உள்ளனர்.

டேட்டிங் செயலிகள்: இந்தியாவில் ஓகே கியூபிட், பம்ப்பிள், டின்டர், ட்ருலீ மேட்லி, ஐஸில், ஹின்ச் என்று பல டேட்டிங் ஆப்கள் உள்ளன. இந்த ஆப்கள் எல்லாம் தங்களுக்கு என்று தனி தனி விதிகளை வைத்துள்ளன. ஆனால் இதன் ஒரே நோக்கம், உங்களுக்கான இணையை, காதலரை, அல்லது டேட்டிங் செய்ய நண்பரை தேடிக்கொடுப்பதுதான். லாக்டவுன் காலத்தில் தனியாக இருக்கும் பலர் தற்போது டேட்டிங் ஆப்களை நாட தொடங்கி இப்போது அந்த செயலிகள் பயன்பாடு உச்சம் தொட்டுள்ளது. .
கணக்குகள் தொடக்கம்; முக்கியமாக கொரோனா தாக்குதலுக்கு பின் டேட்டிங் ஆப்களில் 20-25% பயனாளர்கள் அதிகரித்து இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது. தற்போது இருக்கும் சில டேட்டிங் ஆப்களில் வீடியோ சாட் செய்யும் வசதியும் உள்ளது. அதேபோல் சில டேட்டிங் ஆப்கள் "கடலை" போடுவது என்பதை தாண்டி, திருமணம் செய்யும் அளவிற்கு உறவுகளை இணைக்க தொடங்கி உள்ளது.
கடந்த இரண்டு வருடத்தில் இதன் யூசர்கள் எண்ணிக்கை 128% உயர்ந்துள்ளது. அதேபோல் தினசரி பயன்படுத்தும் யூசர்களின் எண்ணிக்கை 125% உயர்ந்துள்ளது என்று கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. லாக்டவுன் பின்பு பலர் இப்படி டேட்டிங் ஆப்களை இன்ஸ்டால் செய்வதாகவும், நேரம் செல்ல செல்ல இதிலேயே பலர் மொத்தமாக மூழ்கிவிடுவதாகவும் அந்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
பணம் கொடுக்கிறார்கள்: சாட்டிங், டேட்டிங் என்பதை தாண்டி பலர் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தில் கூட டேட்டிங் கணக்குகளை தொடங்குகிறார்கள். இதனால்தான் 30 வயதை தாண்டிய பலர் பிரீமியம் கணக்குகளை டேட்டிங் செயலியில் தொடங்குவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் எளிதாக எதிர்பாலின கணக்குகளை பின் தொடர முடியும். பம்பில் செயலி எடுத்த கணக்கெடுப்பு ஒன்றில் இந்தியாவில் 38% பேர் இந்த வருடம் எப்படியாவது காதலில் விழுந்து கமிட் ஆகிவிட வேண்டும் என்று நம்பிக்கையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இன்ஸ்ட்டா ரீல்ஸ்; டேட்டிங் செயலிகள் மூலம் நடக்க கூடிய பெரிய மோசடி ஒன்றை பற்றி இன்ஸ்டாகிராமில் வரும் ரீல்ஸில் பெண் வழக்கறிஞர் ஒருவர் விளக்கி உள்ளார். அந்த வீடியோவில் பேசும் தேய்ஷா கபூர் என்று வழக்கறிஞர், இன்று நான் ஒரு பெண்ணின் வழக்கை எதிர்கொண்டேன், அவளும் அவளுடைய காதலனும் ஹிஞ்ச் என்ற டேட்டிங் செயலியில் சந்தித்ததாகக் குற்றம் கூடினர்., அதன் மூலம் அவர்கள் ஒருவரையொருவர் அறிந்துகொண்டார்கள்.
பின்னர், அவர்கள் ஒன்றாக வாழ்ந்து பல சந்தர்ப்பங்களில் உடலுறவு கொண்டனர். தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த பையன் கொடுத்த வாக்குறுதியின் பேரில் தான் பாலின உறவில் ஈடுபட்டதாக அந்த பெண் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடைசியில் தன்னை அந்த நபர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால்.. அவர் மீது பலாத்கார புகாரை அந்த பெண் பதிவு செய்துள்ளார். அந்த நபர் மீது போலீசார் தற்போது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். இதனால் அந்த நபர் பலாத்காரம் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டு 16 மாதங்களுக்கும் மேலாக காவலில் இருந்தவர் தற்போது பெயிலில் வந்துள்ளார்.
எனவே, உங்கள் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எந்தவொரு சாதாரண உறவிலும் நுழைவதற்கு முன்பு கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்வதற்காகவும் இந்த சிறிய வீடியோவை நான் செய்துள்ளேன். இதில் நான் இருவரையும் குற்றம் சொல்லவில்லை. அதே சமயம் நீங்கள் டேட்டிங் போகிறேன் என்று ஒரு பெண்ணுடன் உடலுறவு அவரின் சம்மதத்துடன் கொண்டால் கூட.. அதன்பின் நீங்கள் திருமணம் செய்யவில்லை என்றால் உங்கள் மீது பலாத்கார புகார் வைக்கப்படலாம்.
நீங்கள் திருமணத்திற்கு வாக்குறுதி கொடுக்காமல்.. தொடக்கத்தில் இருந்தே அது casual dating ஆக இருந்தாலும் கூட உங்களிடம் பணம் பறிக்க சிலர் இப்படி புகார் கொடுக்கலாம். டெல்லியில் ஒரு பெண், ஒரு போலீஸ், வழக்கறிஞர் சேர்ந்து இப்படி பலரிடம் கோடி கோடியாக ஏமாற்றி உள்ளனர்.
அதனால் டேட்டிங் செயலி மூலம் பெண்களிடம் பழகினால் கவனமாக இருக்கவும். பெண்களும் திருமணம் செய்வதாக சொல்லும் எல்லா ஆண்களையும் நம்பிவிட வேண்டாம் என்று, அந்த ரீல்ஸில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications