தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா? சென்னை வராத திரிணாமுல் பிரதிநிதிகள்! என்ன காரணம்
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாளைய தினம் சென்னையில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள். இதற்கிடையே நாளைய கூட்டத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காமல் புறக்கணிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணத்தையும் நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகத் தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு செய்யவுள்ளது. இதன் மூலம் தற்போதுள்ள 543 தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இருப்பினும், இந்த தொகுதி மறுசீரமைப்பை மக்கள்தொகை அடிப்படையில் செய்தால் அது தென் மாநிலங்களுக்குப் பிரச்சினையாக அமையும் என திமுக தரப்பு கூறுகிறது.

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்
இது தொடர்பாக அனைத்து கட்சிகளின் கருத்துகளைக் கேட்க நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இதற்கான கூட்டம் நாளை நடைபெறுகிறது. நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.
குறிப்பாக ஏழு மாநில முதல்வர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதில் கேரளா, தெலுங்கானா மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்கள் நேரடியாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இதற்காக அவர்கள் சென்னை வந்துவிட்டனர். கர்நாடகா சார்பில் அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூட்டத்தில் பங்கேற்கிறார். அவர் நாளை காலை சென்னை வரவுள்ளார்.
பங்கேற்கும் ஜனசேனா
இது தவிர பிஜூ ஜனதா தளம், பாரதிய ராஷ்ட்ரீய சமீதி கட்சி பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கிறார்கள். மேலும், ஆந்திராவில் உள்ள பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இதில் பங்கேற்கிறது. ஜனசேனா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உதய் சீனிவாஸ் இதில் பங்கேற்கச் சென்னை வந்துள்ளார். ஜனசேனா கட்சி இப்போது ஆந்திராவில் தெலுங்கு தேசம்- பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புறக்கணிக்கும் திரிணாமுல்?
அதேநேரம் இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் சார்பில் மம்தா அல்லது அவரது கட்சி பிரதிநிதி யாராவது பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இன்று வெள்ளிக்கிழமை இரவு வரை எந்தவொரு பிரதிநிதியும் சென்னைக்கு வரவில்லை. இதனால் மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளதாகவே தெரிகிறது.
என்ன காரணம்!
மேற்கு வங்கத்திற்கும் தமிழ்நாட்டைப் போலவே அடுத்தாண்டு தான் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அங்கு வாக்காளர் பலருக்கு ஒரே மாதிரி வாக்காளர் அடையாள அட்டை எண் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தைப் பெரிதாக எழுப்பும் மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார். 2026 தேர்தலை இதை மையாக வைத்தே அவர் அணுகப் போகிறார்.
இந்தச் சூழலில் தொகுதி மறுசீரமைப்பு என வேறு விஷயங்கள் குறித்துப் பேசினால் அது சரிப்பட்டு வராது என மம்தா கருதுவதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவை நாளே நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவை அவர் எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், நாளை காலை வரை டைம் இருப்பதால் கடைசி நேரத்தில் எந்தவொரு மாற்றம் ஏற்படுமா என்ன என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்











Click it and Unblock the Notifications