மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை.. TRUST திறனாய்வு தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு! வெளியானது அறிவிப்பு
சென்னை: பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு வரும் பிப் 1 ஆம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தேர்வு தற்போது பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த திறனாய்வு தேர்வில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 1000 என நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 1000 என 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வு எழுத தகுதி பெற்றவர்களாவர். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும்.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வு கடந்த டிசம்பர் 14-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு எழுத ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் மாநிலம் முழுவதும் டிசம்பர் 2-வது வாரம் பரவலாக கனமழை பெய்தது. இதனால் இந்தத் தேர்வு பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இதனையடுத்து மாணவர்கள் இந்த தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் மீண்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஊரகத் திறனாய்வு தேர்வு மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து துறையின் இயக்குநர் என்.லதா வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் சாரணர் இயக்குநரகத்தின் வைர விழா திருச்சியில் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளதையொட்டி பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறவிருந்த ஊரகத் திறனாய்வுத் தேர்வானது தள்ளிவைக்கப்படுகிறது. இந்த தேர்வு பிப்ரவரி 8 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதுசார்ந்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications