10 நிமிஷம் கையை பிடிச்சிட்டு டிடிவி தினகரன், ஓபிஎஸ் என்ன பேசினாங்க? ஒருங்கிணைந்த அதிமுக வந்துருமோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி அமைந்ததிலிருந்தே அதிமுக தலைமையில் ஆட்சியா, என்டிஏ கூட்டணி ஆட்சியா? என்ற வாதங்கள் புகைந்து வருகின்றன.. இதற்கு நடுவில், அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியும் பரவலாக எழுந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஓபிஎஸ், தினகரன் இருவரும் சந்தித்து பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

அதிமுக-பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் மறுபடியும் சேர்க்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. இதற்கு வழக்கம்போல், எடப்பாடி பழனிசாமியும் மறுத்து வருகிறார்.

TTV Dinakaran O panneerselvam AIADMK

எடப்பாடி பழனிசாமி - பாஜக

எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கேட்டு, தொடர்ந்து பாஜக புறக்கணித்ததால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ், டிடிவி.தினகரன் அதிரடியாக அறிவித்திருந்தனர்.. இதனால் அதிர்ச்சியடைந்த பாஜக மேலிடம், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை கூட்டணிக்குள் மீண்டும் இணைக்க முயற்சித்து வருகிறது.

இந்த ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் போர்க்கொடி தூக்கினார்.. அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கான பணியை அடுத்த 10 நாளில் தொடங்க வேண்டும் என்று கெடு விதித்தார்.. அதுமட்டுமல்லாமல், ஒருவேளை 10 நாளில் இந்தப் பணி ஆரம்பிக்கப்படவில்லையானால் நானே அந்த பணியைத் தொடர்வேன் என்றும் அறிவித்தார்.

ஒருங்கிணைந்த அதிமுக

ஆனால், செங்கோட்டையனின் பதவியும் எடப்பாடி பழனிசாமியால் பறிக்கப்பட்டது.. இதையடுத்து, டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி, எடப்பாடி மீது புகார்களை அடுக்கியதுடன், அதிமுகவை ஒன்றிணைக்க கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தென் மாவட்டங்களில் கடந்த தேர்தலில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரின் வாக்கு சதவீதத்தை கருத்தில் கொண்டு அவர்களை மறுபடியும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்றும், இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

இதையடுத்து, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் இணைக்க நட்டா அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

டிடிவி தினகரன், ஓபிஎஸ் சந்திப்பு

இப்படி ஒட்டுமொத்த பேரும் ஒருங்கிணைந்த அதிமுகவுக்காக முயற்சித்து வரும்நிலையில், இதற்கு எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டை போட்டு வரும்நிலையில், இதில் ஒருபடிமேல சென்ற பாஜக, அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிடாமல் பாஜக கூட்டணியின் கீழ் பிரிந்து சென்றவர்களை கொண்டு வந்து கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் டிடிவி, ஓபிஎஸ்ஸுக்கு தொகுதிகளை ஒதுக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை தந்துவருகிறது..

அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரன் இணையலாம் என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியிருப்பது அதற்கு மேல் பரபரப்பை தந்துவிட்டது.

10 நிமிடம் என்ன பேசினார்கள்

இப்படி ஏகப்பட்ட பரபரப்புகள் பாஜக-அதிமுகவுக்குள் நடந்து வரும்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.. சென்னையில் நேற்று நடைபெற்ற விஜடி விஸ்வநாதன் வீட்டு திருமண விழாவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசியுள்ளனர்.

அப்போது இருவரும் ஒருவரையொருவர் கைகுலுக்கி கொண்டனர். அப்போது அருகருகே உட்கார்ந்து 10 நிமிடம் வரை இவரும் பேசிக் கொண்டனர். தெரிகிறது. சசிகலா, டிடிவி தினகரனை விரைவில் சந்திப்பேன் என ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில், இந்த விழாவில் இருவரும் உரையாடினர்.

இவர்கள் இருவரும் சந்தித்து பேசப்போவதாக, கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வலம் வந்தன.. ஆனால், அப்படியான முக்கிய சந்திப்பு எதுவுமே நடைபெறவில்லை.. இதற்கு முன்புகூட, சென்னையில் விஜடி விஸ்வநாதன் வீட்டு திருமண விழாவிலும் இவர்கள் இதுபோலவே ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரித்து கொண்டது நினைவிருக்கலாம்.

முக்குலத்தோர் வாக்குகள்

தற்போதும் அதேபோன்ற சந்திப்பு என்றாலும், தற்போதைய சூழலில் அரசியல் ரீதியான முக்கியத்துவத்தை நேற்றைய நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது.

இதுவரை பெரிதாக ஓபிஎஸ், தினகரன் இருவரும் சந்தித்து கொள்ளவில்லை என்றாலும், ஒரே கருத்துடன் இருவருமே தொடர்ந்து பயணித்து வருகின்றனர்.. முக்குலத்தோர் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று, தென்மண்டல வாக்குகளையும் கணிசமாக தங்கள் கையில் வைத்துள்ளனர்.. விரைவில் தேர்தல்வர உள்ள நிலையில், அதிமுகவும் இந்த சந்திப்பை உற்று கவனித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+