தினகரனின் அடுத்தடுத்த ஸ்டெப்ஸ்.. டென்ஷன் தலைக்கேறும் சசிகலா... என்னெல்லாம் ஆகுமோ!
தினகரன் மீது சசிகலா காட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: கூடிய சீக்கிரம் அதிமுகவுக்கு சசிகலா தலைமையேற்று விடுவார் என்றே அரசல் புரசலான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதே சமயம் தினகரனின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை கண்டும் சசிகலா இன்னும் கோபத்தின் உச்சிக்குதான் போகிறாராம்!
அதிமுகவை விட்டு விடக்கூடாது என்பதும், கழக தொண்டர்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்பதும்தான் சசிகலா சிறை செல்லும் முன்னும், அதற்கு பின்பும் சொல்லி வந்த விஷயம்.
கால சூழலில் அமமுக உதயமாகி, அக்கட்சி நிர்வாகிகளுடன் தினகரனுக்கு ஏற்பட்ட மோதல், லடாய்களை கேள்விப்பட்ட சசிகலா நொந்து போனதாகவும் சொல்லப்பட்டது. இறுதியில் எம்பி தேர்தலின் தோல்வியும், கறையும், தினகரனை சிறையில் சந்திக்க மறுக்கும் அளவுக்கும் போய்விட்டது.

முயற்சி
இப்போது திரும்பவும் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளார் டிடிவி. இதற்காக கட்சியை பதிவு செய்தார், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினார், நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல்களை சந்திக்க தயார் என்றும் சொல்லிவிட்டார். இது போதாமல், இந்த சமயத்தில் அடுத்த கட்ட அறிவிப்பாக மாவட்டங்களில் புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.

தகவல்கள்
அடுத்தடுத்து தினகரன் செய்து கொண்டிருக்கிற காரியத்தை கண்டு சசிகலா இன்னும் கடுப்பில் உள்ளாராம். இதற்கு முக்கிய காரணம், சில நாட்களாகவே அதிமுகவுக்கு சசிகலாவை தலைமையேற்க செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

மறுப்பு
இது சம்பந்தமாக அதிமுக சார்பில் மறுத்து கருத்தும் சொல்லவில்லை. வெளிநாடு செல்லும்முன்பு, முதல்வர் கூட சசிகலாவிடம் தகவலை சொல்லிவிட்டுதான் போனார் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதனால் அதிமுக சசிகலா கையில் வருவதற்கான நடவடிக்கைககள் மெல்ல மெல்ல எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், தினகரனின் செயல்பாடுகள் சசிகலாவுக்கு அதிர்ச்சியைதான் தந்து வருகிறதாம்.

தலைமை
இப்படி புது புது நபர்களுக்கு பொறுப்பு தந்தால், அது நாளை அதிமுகவை பாதிக்கும் என்று சசிகலா தரப்பு நினைக்கிறது போலும். ஆனால், இருப்பவர்களையாவது தக்க வைத்து கொள்ள வேண்டுமே என்று தினகரன் நினைக்கிறார் போலும். இதில் எது உண்மை என்று தெரியவில்லை. ஆனால், அதிமுகவுக்கு சசிகலா தலைமை பொறுப்பேற்பது என்ற பேச்சு மட்டும் பலமாக அடிபட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications