துருக்கி சும்மா இருக்காது போலயே.. இந்தியாவிற்கு எதிராக எடுத்த பரபரப்பு நிலைப்பாடு.. என்ன நடக்குது?
இஸ்லாமாபாத்: துருக்கி நாட்டிற்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்த்து வரும் நிலையில், துருக்கி பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன் இந்தியாவிற்கு எதிராக முக்கியமான கருத்து ஒன்றை கூறி உள்ளார்.
பாகிஸ்தான் இந்தியா போருக்கு முன்பில் இருந்தே பாகிஸ்தானுக்கு துருக்கி உதவி செய்து வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு போர் உபகரணங்களை கொத்து கொத்தாக துருக்கி அனுப்பி உள்ளது. துருக்கிய விமானப்படையின் C-130 ஹெர்குலஸ், ராணுவ போக்குவரத்து விமானம் உட்பட பல போர் உபகரணங்கள் அனுப்பப்பட்டு உள்ளது.
சமீபத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் செய்தியாளர் சந்திப்பு நடத்தியது. இதிலேயே பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா ஆதரவு இருப்பது உறுதியானது. பாகிஸ்தான் தனது தாக்குதலில் சீன ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட நிலையில், சீன ட்ரோன்களுடன் சேர்த்து துருக்கி ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியது. 36 இடங்களைக் குறிவைத்து சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தியப் பாதுகாப்புப் படை கைனடிக் (kinetic) மற்றும் நான் கைனடிக் (non-kinetic) முறையில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இவை துருக்கி மற்றும் சீனாவின் டிரோன்கள், என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.
இப்படி இந்தியா பாகிஸ்தான் போர் முழுக்கவே துருக்கி பாகிஸ்தானுக்கு அடுத்தடுத்து உதவி செய்து வந்தது.

இந்தியாவிற்கு எதிராக நிலைப்பாடு
இதையடுத்து இந்தியர்கள் துருக்கிக்கு பயணம் செய்வதை நிறுத்தி உள்ளனர். இந்தியாவுடனான சமீபத்திய பதட்டங்களின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் அளித்த ஆதரவிற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியர்கள் அங்கே பயணம் செய்வதை நிறுத்தி உள்ளனர்.
அந்த நாடுகளுக்கான பயண முன்பதிவுகள் வெகுவாகக் மேக்மைட்ரிப் முன்பதிவுகளில் 60% சரிவையும், ரத்துசெய்தல்களில் 250% அதிகரிப்பையும் குறிப்பிட்டுள்ளது. கிளியர்ட்ரிப் ரத்துசெய்தல்களில் 260% அதிகரிப்பை அறிவித்தது. இதனால் துருக்கிக்கு பல மில்லியன் டாலர் இழப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
துருக்கி பிரதமர் அடாவடி
துருக்கி நாட்டிற்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்த்து வரும் நிலையில், துருக்கி பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன் இந்தியாவிற்கு எதிராக முக்கியமான கருத்து ஒன்றை கூறி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை ஒன்றில், பாகிஸ்தான் நமது நட்பு நாடு அல்ல. அது நமது சகோதர நாடு. பாகிஸ்தான் உடன் சகோதரத்துவத்தை நாங்கள் கடைபிடிக்கிறோம்.
அதன் பிரதமர் ஷாபாஸ் எனக்கு சகோதரர் போன்றவர். பாகிஸ்தான் உடனே இக்கட்டான நேரங்களில் இந்தியா உடன் இருக்கும். பாகிஸ்தான் உடன் நாங்கள் நெருக்கமாக பணிகளை செய்ய விரும்புகிறோம் என்று துருக்கி பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
இந்தியா துருக்கியை நேரடியாக எதிர்த்தது இல்லை. நேரடியாக தாக்கியது இல்லை. ஏன் துருக்கி நிலநடுக்கத்திற்கு இந்தியா பணம் கூட அனுப்பி உள்ளது. ஆனால் இத்தனை இருந்தும், வரலாற்று ரீதியாக எதிரியாக இல்லாத இந்தியாவை துருக்கி எதிர்ப்பது ஏன்? போர் சமயத்தில் பாகிஸ்தான் போன்ற நாட்டிற்கு உதவுவது ஏன் என்ற கேள்வி பலருக்கு எழலாம். இதற்கான காரணங்களை இங்கே விளக்கி உள்ளோம்.
துருக்கி பாகிஸ்தானை ஏன் ஆதரிக்கிறது:
1. வலுவான இஸ்லாமிய பிணைப்பு: இரண்டும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் மற்றும் நீண்டகால மத மற்றும் கலாச்சார உறவைப் பகிர்ந்து கொள்கின்றன.
2.காஷ்மீர் நிலைப்பாடு: காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் நிலைப்பாட்டை துருக்கி ஆதரிக்கிறது, பெரும்பாலும் சர்வதேச மன்றங்களில் இந்தப் பிரச்சினையை எழுப்புகிறது.
3. இராணுவ உறவுகள்: துருக்கியும் பாகிஸ்தானும் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் இராணுவப் பயிற்சியில் ஒத்துழைக்கின்றன.
4. அரசியல் அமைப்பு: ஐ.நா. மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு) ஆகியவற்றில் எழுப்பப்படும் பிரச்சினைகளில் இரு நாடுகளும் பெரும்பாலும் இந்தியாவுக்கு எதிராக இணைகின்றன.












Click it and Unblock the Notifications