Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவ்வளவு நாடுகளா? இங்கெல்லாம் ஒரு பைசா கூட வரி கிடையாதாம்..இந்தியாவில் மட்டும் ஏன்?இத படிங்க புரியும்

இந்தியாவில் மக்களுக்கு பல்வேறு வகையான வரிகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் எந்த வரி விதிப்பு முறைகளும் நடைமுறையில் இல்லை.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் வயது வந்தோர் தங்களின் வருமானத்தை பொறுத்து வருமான வரி செலுத்தி வரும் நிலையில் பிற பொருட்களுக்கும் குறிப்பிட்ட வரியை செலுத்துகின்றனர். சிறு குழந்தைகள் உண்ணும் உணவு பொருட்கள் முதல் முதியவர்களுக்கான மருந்து, மாத்திரைகள் வரை பலவற்றுக்குள் வரி விதிக்கும் முறை உள்ளது. இதனால் ஒவ்வொரு சிறுகுழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற ஏதேனும் ஒரு வகையில் வரி செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் நிலைமை இப்படி இருக்க, பல வெளிநாடுகளில் வரி இல்லாத நிலை இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

சரி மக்களிடம் வரி இல்லாவிட்டால் அந்த நாட்டின் அரசு என்ன செய்யும்? என நீங்கள் கேள்வி கேட்டால் அதற்கான பதிலும் இந்த செய்தியில் உள்ளது. அதாவது மக்களிடம் வரி வசூலிப்பதற்கு பதில் மாற்று வழியை பல நாடுகள் பின்பற்றி வருகின்றன. அது என்ன? எந்தெந்த நாடுகளில் வரி விதிப்பு முறை இல்லை? என்பது பற்றிய முழுவிபரம் உங்களுக்காக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வரி.. இந்தியா சுதந்திரம் அடையும் முன்பே மன்னர் ஆட்சிக்காலத்தில் ‛கப்பம்' என்ற பெயரில் நடைமுறையில் இருந்தது. முதலில் பிராந்தியத்தை ஆளும் மன்னர்களுக்கு மக்கள் கப்பம் கட்டிய நிலையில் தற்போது மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் வரி செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் வரி விதிப்பு முறை

இந்தியாவில் வரி விதிப்பு முறை

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் தங்களின் ஆட்சி நிர்வாகத்தை மக்களின் வரிப்பணத்தில் தான் நடத்தி வருகின்றனர். எம்பி, எம்எல்ஏ, கவுன்சிலர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம், அதிகாரிகளின் சம்பளம் உள்ளிட்டவை மக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கான நலத்திட்டங்களையும் வரிப்பணத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவை பொறுத்தமட்டில் மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் வரிகளை வசூலித்து வருகின்றன. இத்தகைய வரி வசூலிப்பு முறை என்பது சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

என்னென்ன வரிகள் உள்ளன

என்னென்ன வரிகள் உள்ளன

இந்தியாவில் 2 வகையான வரிகள் உள்ளன. ஒன்று நேரடி வரி, மற்றொன்று மறைமுக வரியாகும். நேரடி வரி முறை என்பது வருமான வரி, வங்கி பணபரிவர்த்தனை வரி உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கி உள்ளது. மறைமுக வரி என்பது பொருட்கள் அல்லது சேவைகளை பெற செலுத்த வேண்டிய கட்டணமாக உள்ளது. இதில் விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி, சுங்கவரி, கலால் வரி,சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்டவை அடங்கும். தற்போதைய சூழலில் இந்தியாவில் பெரும்பலானவர்கள் ஏதேனும் ஒரு வகையில் வரி செலுத்தி வருகின்றனர். உதாரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் வாங்கினால் கூட மத்திய அரசு, மாநில அரசு வரிகளுடன் தான் மக்கள் அதற்கான கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். அதன்படி பார்த்தால் நீங்களே புரிந்து கொள்ளலாம். ஏறக்குறைய அனைத்து மக்களும் வரி செலுத்துவதை நாமே உணர்ந்து கொள்ளலாம்.

வரி வசூலிக்காத நாடுகள்

வரி வசூலிக்காத நாடுகள்

இந்தியாவில் நிலைமை இப்படி இருக்க சில நாடுகளில் மக்கள் வரி செலுத்தும் முறை இன்னும் கூட நடைமுறையில் இல்லை. ஏறக்குறைய 10க்கும் அதிகமான நாடுகளில் சொந்த நாட்டு மக்களிடம் இருந்து வரி வசூலிப்பது இல்லையாம். UAE எனும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துபாய், கத்தார், குவைத், ஓமன், பஹாமாஸ், பெர்முடா, புருனே, மொனாக்கோ, நவ்ரூ, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், பஹ்ரைன் உள்ளிட்டவற்றில் வசிக்கும் மக்களுக்கு அந்நாட்டு அரசுகள் வரிகள் விதிப்பது இல்லையாம்.

வரி இல்லாமல் சமாளிப்பது எப்படி?

வரி இல்லாமல் சமாளிப்பது எப்படி?

மக்களிடம் வரி வசூலிக்காமல் இந்த நாடுகள் மாற்று வழியில் செயல்பட்டு வருகின்றனர். உதாரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை எடுத்து கொண்டால் அந்த நாடு மிகவும் அழகாகவும், பொருளாதாரத்தில் மேன்மையுடன் திகழ்கிறது. இதற்கு காரணம் அந்த நாட்டின் கச்சா எண்ணெய் வருவாயாகும். ஐக்கிய அரபு எமிரேட் எண்ணெய் வளமிக்கத்துடன் உள்ள நிலையில் பல நாடுகளுக்கும் அங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்கின்றன. இதற்காக ஒவ்வொரு நாடுகளும் பெரும் தொகையை ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வழங்குகின்றன. இது அந்த நாட்டு அரசாங்கத்துக்கு போதுமானதாக உள்ளது. அதோடு அந்த நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் சென்று வருகின்றனர். அவர்களுக்கான ஓட்டல் வரி, விசா கட்டணம் உள்ளிட்ட பயணம் சார்ந்த வரிகளும் அந்த நாட்டுக்கு பெரும் வருமானத்தை ஈட்டி கொடுக்கிறது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களிடம் வரி வசூலிப்பது இல்லை.

துபாய், கத்தார், ஓமன் நாடுகள்

துபாய், கத்தார், ஓமன் நாடுகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரிசையில் அடுத்ததாக நாம் பார்த்தால் துபாயை எடுத்து கொள்ளலாம். இது கச்சாஎண்ணெய் வளத்துடன் இருப்பதோடு, சுற்றுலாத்துறை மூலம் அதிக வருமானம் ஈட்டி வருகிறது. இதேபோல் ஓமன் எண்ணெய் வளத்துட்ன சுற்றுலா மற்றும் கப்பல் சார் வணிகத்தில் சிறந்து விளங்குகிறது. இதனால் அந்த நாடும் மக்களுக்கு வரி விதிப்பது இல்லை. குவைத், கத்தார் ஆகிய நாடுகள் எண்ணெய் வளம் கைக்கொடுப்பதால் அங்கும் மக்கள் வரி கட்டும் முறை இல்லாமல் உள்ளது.

பெர்முடா, நவ்ரூ, பஹ்ரைன்

பெர்முடா, நவ்ரூ, பஹ்ரைன்

மேலும் பஹாமாஸ், பெர்முடா, புருனே, மொனாக்கோ, நவ்ரூ, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், வாடிகன், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளிலும் வருமான வரி என்பது இல்லை. இதில் பெர்முடா, மொனாக்கோ ஆகியவை நிதிக்கான சேவைத் துறையை நம்பியுள்ளது. இங்குள்ள வங்கி, காப்பீடு, முதலீடு உள்ளிட்டவற்றிலும் இருந்த அதிக வரி கிடைப்பதால் மக்களை வரி கட்ட பணிப்பது இல்லை. பிற நாடுகளும் இதேபோன்று மாற்று வழியில் வருவாய் ஈட்டி வருகின்றன. மக்கள் தொகை குறைவாக இருக்கும் நிலையில் அவர்களின் அரசை நடத்த அதுவே போதுமானதாக உள்ளதால் வரி விதிப்பு முறை அங்கு தேவையானதாக இல்லையாம். மேலும் இந்த செய்தியில் குறிப்பிட்ட நாடுகளில் இந்தியாவை போன்ற வரி விதிப்பு முறை நிறைந்து இல்லாமல் சில விஷயங்களில் அதாவது தொழில்சார்ந்த செயல்பாடுகளுக்கு மிகக்குறைவான அளவில்வரி செலுத்தும் முறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் வரி வசூலிப்பு ஏன்?

இந்தியாவில் வரி வசூலிப்பு ஏன்?

இந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாகும். இதனால் அனைத்து மக்களுக்கான தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்தி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்க தேவையான வகையில் இந்தியா இன்னும் கூட தன்னிறைவு அடையவில்லை. மேலும் கச்சா எண்ணெய் உள்பட பல பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். மேலும் அனைத்து பொருட்களும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவது இல்லை. இதனால் அனைத்து மக்களுக்கு தேவையான இந்தியாவில் வரி வசூலிப்பு என்பது முக்கியமானதாகும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+