அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகை உதயநிதி ஸ்டாலின் அறையின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பொறுப்பினை கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். கூடுதலாக சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் இருந்து உதயநிதி ஸ்டாலின் துறை தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவராத நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள உதயநிதிஸ்டாலின் அறைக்கு வெளியே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் என்ற பெயர் பலகை பொருத்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இந்த துறையை அமைச்சர் மெய்யநாதன் கூடுதல் பொறுப்பாக பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரிடமிருந்து அந்த துறையை பிரித்து தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்தத் துறை என்பது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை இதன் மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஆளுநர் மாளிகையிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. முதல்வர் பரிந்துரையை ஏற்று எந்த துறை ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவான உடனேயே உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் அமைச்சர்களும், தி.மு.க தொண்டர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். திமுக ஆட்சிப்பொறுப்பேற்று 19 மாதங்கள் கடந்த நிலையில் இன்றைய தினம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க ஒப்புதல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில், புதிய அமைச்சராக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சராக பதவியேற்ற பின்னர் தனது தந்தையின் காலில் விழுந்து ஆசி பெற்றார். தனது அமைச்சர் பதவியை பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின்.
முதலமைச்சர் உள்பட 34 அமைச்சர்கள் உள்ள நிலையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின்
பொறுப்பேற்றுள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுகவில் இளைஞரணியின் செயலாளராக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழகத்தில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் விளையாட்டுத்துறையில் ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான துறை ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவினை அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இளைஞர் நலன் துறையும் விளையாட்டுத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகை தலைமைச் செயலகத்தில் உதயநிதி ஸ்டாலின் அறையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
என்மீதான விமர்சனங்களுக்கு என்னுடைய செயல்கள் மூலம் பதில் தருவேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். விளையாட்டு துறை தலைநகரமாக தமிழகத்தை மாற்றுவேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இனிவரும் காலம் இளைஞர்களின் காலம் என்பதை உணர்த்தும் வகையில் உதயநிதியின் கையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுதுறையை வழங்கியுள்ளார். இந்த துறை அமைச்சர் மெய்யநாதனிடம் கூடுதலாக இருந்தது. அந்த துறை தற்போது உதயநிதியின் வசமாகியுள்ளது. அவரது நண்பர் அன்பில் மகேஷ் வசம் பள்ளிக்கல்வித்துறை உள்ளது. இனி இருவரும் இணைந்து பள்ளி கல்வி, விளையாட்டு, இளைஞர் நலனை மேம்படுத்த சிறப்பாக பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications