விஜய் பேச்சு..உதயநிதி ஸ்டாலின் இப்படி சொல்லிட்டாரே! அரசியலில் அனல் பறக்கப்போகிறதா?
சென்னை: வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என்று நடிகர் விஜய் பேசியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
தொகுதி அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பரிசளிக்கும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டு உள்ளனர்.
இதில் நடிகர் விஜய் மாநில அளவில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்து 600க்கு 600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு வைர செயின் கொடுத்து பாராட்டினார். அதேபோல் தொகுதி வாரியாக 0 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

முன்னதாக விழாவில் பேசிய விஜய் மாணவ மாணவிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக கல்வியின் முக்கியத்துவம், குண நலன்கள், தேர்தல் தொடர்பாக பேசினார். அப்போது பேசிய அவர், "நாளைய வாக்காளர்கள் ங்கள் தான். அடுத்தடுத்து நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள்.
நம் விரலை வைத்து நமது கண்ணையே குத்திக் கொள்வதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அதுதான் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதாகும். ஒரு ஒட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்றால், ஒருவர் 15 கோடி செலவு செய்தால் அதற்கு முன் அவர்கள் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள் என்று சித்தித்து பாருங்கள்." என்றார்.
விஜய்யின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர், அரசியல் பிரமுகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்த அவர், "வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என்று நடிகர் விஜய் நல்லதைதானே சொல்லி இருக்கிறார். அதில் உங்களுக்கு எதுவும் பிரச்சனை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் அரசியலுக்கு வரவேண்டும், அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை." என்று தெரிவித்தார்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்ற உதயநிதி கருத்து, விஜயின் அரசியல் ஆசையை மறைமுகமாக புரிந்து கொண்டு அளித்த பதிலாக பார்க்கப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வந்தால் அரசியலில் அடுத்த பரபரப்பு ஆரம்பிக்கும் என்று தெரிகிறது.
-
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்!












Click it and Unblock the Notifications