இரவே வந்த குட் நியூஸ்.. பல லட்சம் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. 10 வருட ஏக்கத்திற்கு முடிவு
சென்னை: மத்திய நிதி அமைச்சகம் வருங்கால வைப்பு நிதி வரம்பை கடந்த 10 வருடமாக ரூ.15,000 ஆக வைத்திருந்த நிலையில் தற்போது உயர்த்தும் முடிவை எடுத்துள்ளதாம். அதன்படி மத்திய அரசாங்கம் உச்சவரம்பை ரூ.25,000 ஆக உயர்த்தலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாம். இதற்காக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் முன்மொழிவு ஒன்றை தயாரித்துள்ளது.
2024-24ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை பட்ஜெட் கூட்ட தொடரில் இந்த மாதம் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். இதற்காக தற்போது நிதித்துறை அலுவலகம் இயங்க தொடங்கி உள்ளது. இதற்காக அந்த அலுவலகம் வெளியாட்கள், மற்ற துறையினர் வருகையை அனுமதிக்காத வகையில் தடுக்கப்பட்டு உள்ளது. முழு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு, ஜிஎஸ்டி திருத்தங்கள், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முக்கியமாக தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இப்போது இருக்கும் முறை: பழைய மற்றும் புதிய வருமான வரி முறை இடையில் மாற தனி நபர்களுக்கு உரிமை உள்ளது. அதே சமயம் ஒரு நபர் இரண்டிற்கும் இடையே எத்தனை முறை மாறலாம் என்பதற்கு வருமான வரித்துறை கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அவர்களின் வருமான வகை ஸ்லாப்பை பொறுத்தே இரண்டிற்கும் இடையில் மாறுவதற்கு அனுமதி அளிக்க முடியும்.
பிஸ்னஸ் செய்து வருவாய் வாங்கும் மக்கள்.. ஒரே ஒரு முறை மட்டும் பழைய மற்றும் புதிய வருமான வரி முறை இடையில் மாற அனுமதிக்கப்படுவார்கள். அதாவது நீங்கள் பழைய முறையில் இருந்து புதிய முறைக்கு மாறினால்.. அதன்பின் மாற முடியும்.
புதிய வருமான வரி முறைக்கு மாறுவதற்கான உங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் படிவம் 10IEஐப் பதிவிறக்கி நிரப்பவும். ஜூலை 31 க்கு முன் படிவம் 10IE ஐ சமர்ப்பிக்கவும். இதன் மூலம் பழைய வருமான வரி முறையை பயன்படுத்தும் நபர்கள்.. அதை புதிய முறைக்கு மாற்றிக்கொள்ள முடியும். இதே முறையை பயன்படுத்தி பழைய முறைக்கும் மாற முடியும். ஆனால் புதிய முறையில் இருந்து பழைய முறைக்கு மாற ஒரே ஒரு முறை மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
பிஎப் மாற்றம்: அந்த வகையில் தற்போது மத்திய நிதி அமைச்சகம் வருங்கால வைப்பு நிதி வரம்பை கடந்த 10 வருடமாக ரூ.15,000 ஆக வைத்திருந்த நிலையில் தற்போது உயர்த்தும் முடிவை எடுத்துள்ளதாம். அதன்படி மத்திய அரசாங்கம் உச்சவரம்பை ரூ.25,000 ஆக உயர்த்தலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாம். இதற்காக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் முன்மொழிவு ஒன்றை தயாரித்துள்ளது.
கடைசியாக 2014 இல் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் கீழ் பங்களிப்புகளுக்கான உச்சவரம்பை திருத்தினர். பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம், 1952 (EPF சட்டம்) மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர ஒதுக்கீடுகள் திட்டம், 1952 (EPF திட்டம்), செப்டம்பர் 1, 2014 முதல் பிஎஃப் தொகை ரூ.6,500ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது.
PF விதிகள்: ஊதிய உச்சவரம்பு எப்போது, எவ்வளவு அதிகரித்தது
கால ஊதிய உச்சவரம்பு (மாதத்திற்கு)
1 நவம்பர் 1952 முதல் 31 மே 1957 வரை ரூ 300
1 ஜூன் 1957 முதல் 30 டிசம்பர் 1962 வரை ரூ 500
31 டிசம்பர் 1962 முதல் 10 டிசம்பர் 1976 வரை ரூ 1000
11 டிசம்பர் 1976 முதல் 31 ஆகஸ்ட் 1985 வரை ரூ 1600
1 செப்டம்பர் 1985 முதல் 31 அக்டோபர் 1990 வரை ரூ 2500
1 நவம்பர் 1990 முதல் 30 செப்டம்பர் 1994 வரை ரூ 3500
1 அக்டோபர் 1994 முதல் 31 மே 2011 வரை ரூ 5000
ஜூன் 1, 2001 முதல் ஆகஸ்ட் 31, 2014 வரை ரூ 6500
செப்டம்பர் 1, 2014 முதல் தற்போது வரை ரூ.15000
இதை இந்த முறை 25 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பட்ஜெட் வருமான வரி: 2023ல் செய்யப்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வருடம் இதில் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை. அதே சமயம் பழைய வருமான வரி விதிப்பு முறையில் (old regime) மத்திய அரசு கடந்த வருடமும் சரி, இந்த வருடமும் சரி.. எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
இப்போது உள்ள நடைமுறை: தற்போது வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் உள்ளன. இந்த இரண்டு முறைகளில் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய முடியும்.
முதல் முறை - பழைய வரி விதிப்பு முறை. இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
புதிய முறை: பழைய முறை வேண்டாதவர்கள் புதிய முறையை பின்பற்ற முடியும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதில் இன்று மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு முன்பு வரை, நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும்.
அதுவே 5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சம் வரை வாங்கினால் 10 சதவிகிதம் வரி இருக்கும். 7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 15 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20% வரி 20 சதவிகிதம் வரி விதிக்கப்படும். நடைமுறையில் இருந்த இந்த புதிய வரி விதிப்பு முறையில் கடந்த பட்ஜெட்டில் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 7 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 7க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது.
அதுவே நீங்கள் 7.10 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 0 - 300000 வருமானத்திற்கு : 0 சதவீத வரி விதிக்கப்படும் . 300000-600000 வருவாய்க்கு : 5 சதவீத வரி விதிக்கப்படும் . 600000 -900000 விதிக்கப்படும் : 10 சதவீத வரி விதிக்கப்படும் 900000 - 1200000 வருவாய்க்கு : 15 சதவீத வரி விதிக்கப்படும் 1200000 -1500000 வருவாய்க்கு : 20சதவீத வரி விதிக்கப்படும் 15 மேல் வருவாய்க்கு : 30 சதவீத வரி விதிக்கப்படும் . புரிகிறபடி சொன்னால்.. 7 லட்சத்திற்கு வரி இருக்காது.
ஆனால் நீங்கள் 8 லட்சம் வருமானம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. இப்போது அந்த 8 லட்சத்தில் முதல் 3 லட்சத்திற்கு வரி இல்லை. 3-6 லட்சத்திற்கு 5 சதவிகிதம் வரி உள்ளது. 6 -9 லட்சத்திற்கு 10 சதவிகிதம் வரி உள்ளது. இதனால் 35,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டி இருக்கும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதனால் இதை அப்படியே கட்ட வேண்டி இருக்கும்.












Click it and Unblock the Notifications