Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்ஐசி இன்சூரன்ஸ் அல்லது வேறு இன்சூரன்ஸ் வச்சு இருக்கீங்களா? வந்தது புதிய சட்டம்.. அடித்த ஜாக்பாட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய காப்பீட்டுத் துறை.. அதாவது உங்களின் இன்சூரன்ஸ்களை நிர்வகிக்கும் துறை ஒரு பெரும் மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. காப்பீட்டு நிறுவனங்களில் 100% வெளிநாட்டு முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இம்முடிவு வரும் ஆண்டுகளில் காப்பீட்டு திட்டங்களையோ விலை, விற்பனை, சேவை முறையை மொத்தமாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் அறிமுகப்படுத்திய "சப்கா பீமா சப்கி ரக்ஷா" (காப்பீட்டுச் சட்டங்கள் (திருத்த) மசோதா, 2025) மூலம் இந்த திட்டங்கள் மாற்றப்பட்டு உள்ளன. அதிக மக்களை காப்பீட்டுப் பாதுகாப்பிற்குள் கொண்டுவருதல், துறையை வலுவானதாகவும், போட்டித்தன்மை மிக்கதாகவும், வாடிக்கையாளர்-நட்புடையதாகவும் மாற்றுவதே இதன் லட்சியம்.

insurance

இன்சூரன்ஸ் துறை மாறுகிறது

முன்னர், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய காப்பீட்டு நிறுவனங்களில் 74% வரை மட்டுமே உரிமை பெற்றிருந்தனர். புதிய முன்மொழிவு இந்த வரம்பை 100% ஆக உயர்த்தி, உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவில் முழு உரிமையுடன் செயல்பட வழிவகுக்கிறது.

இது காப்பீட்டு சட்டம் 1938, எல்.ஐ.சி சட்டம் 1956, ஐ.ஆர்.டி.ஏ.ஐ சட்டம் 1999 ஆகிய முக்கிய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்கிறது. "2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு" என்ற அரசின் நீண்டகால இலக்கையும், வணிகம் செய்வதை எளிதாக்குதலையும் இம்மாற்றங்கள் ஆதரிக்கின்றன.

காப்பீட்டுதாரர்களுக்கு, அதிகரித்த போட்டியால் பெரும் பலன் உண்டு. உலகளாவிய காப்பீட்டு நிறுவனங்களின் புதிய திட்டங்கள், சர்வதேச அனுபவம், புதிய காப்பீடு பிளான்கள் வடிவமைக்கவும், சேவைகளை மேம்படுத்தவும் கூடுதல் வாய்ப்புகளை வழங்கும். அதாவது போட்டி அதிகரித்தால், திட்டங்களின் பலன்கள் சலுகைகள் அதிகரிக்கும்.

இன்சூரன்ஸ் சலுகைகள் அதிகரிக்கும்

அதாவது பல வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வரும். அவர்கள் இந்தியர்களை கவர புதிய திட்டங்களை வழங்குவார்கள். பல காப்பீடுகள் அமலுக்கு வரும். இதில் பல சலுகைகள் கிடைக்கும். இதனால் பல சில்லறை இன்சூரன்ஸ்கள் கிடைக்கவும் வழி ஏற்படும்.

இன்னொரு பக்கம் இந்தியாவின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஃபாஸ்டேக் (Fastag) வெளியிட விருப்பம் தெரிவித்து உள்ளது.

ஃபாஸ்டேக் (Fastag) திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கக் கோரி, காப்பீட்டு நிறுவனங்கள் மத்திய அரசை அணுகியுள்ளன. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக அதிகாரிகளை காப்பீட்டுத் துறையின் உயர் நிர்வாகிகள் சந்தித்து, ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்களை தாங்களும் வெளியிட அனுமதிக்குமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஃபாஸ்டேக் (Fastag)

வாகனத்தின் ஆயுள் சுழற்சியில், வாகனத்தின் விபத்துகள், அதன் பயன்பாடு அனைத்திலும் காப்பீட்டு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாகனங்களில் காப்பீட்டுத் துறை ஆற்றும் முக்கியப் பங்கைச் சுட்டிக்காட்டி இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த உரையாடல்கள் தற்போது ஆரம்ப கட்டத்தில், தனிப்பட்ட முறையில் நடைபெறுகின்றன. பொது நிதிகளைக் கையாள காப்பீட்டு நிறுவனங்களுக்கு உரிமம் இருப்பதால், அவர்கள் ஃபாஸ்டேக் வெளியிடவும் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது, வாகனங்களில் உள்ள ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்கள் அல்லது ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) குறிச்சொற்கள் மூலம் மின்னணு முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தப்படுகிறது. வங்கிகள் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்களை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அமேசான் பே (Amazon Pay), பார்க் பிளஸ் (Park Plus) போன்ற சில நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் வங்கிகளுடன் இணைந்து இவற்றை விநியோகிக்கின்றன. இதில் விரைவில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இணைய வாய்ப்புகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+