டிரம்ப் ஆரம்பித்த வர்த்தக போர்.. தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய சிக்கல்.. இப்படி ஒரு பிரச்சினை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் ஐடி துறை தொடங்கி ஆட்டோமொபைல் துறை வரை பல துறைகள் இந்தியாவில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதில் முக்கியமாக இந்தியாவில் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு 25% வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. டிரம்பின் 25% வரியானது மடிக்கணினிகள் மற்றும் டெஸ்க்டாப் சாதனங்கள், மொபைல் சாதனங்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மீதும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ள துறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.'

எவ்வளவு வரி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம்., வரி விதிக்கப்படும். அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

US President Donald Trump reciprocal tariff action may affect Tamil Nadu the most Here is the reason

ஆட்டோமொபைல் துறை

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு 25% வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி ஆகும் பல யூனிட் கார்களுக்கான வரிகள் அதிகரிக்கப்படலாம். ஏற்கனவே இந்தியாவில் பணியாளர்களை நியமிப்பதற்கான வேலைகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கி உள்ளது. இதன் மூலம் இந்திய மார்க்கெட்டில் நேரடியாக உற்பத்தியை மேற்கொள்ள டெஸ்லா நினைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதை கடுமையாக கண்டித்து உள்ளார்.

இந்தியாவில் அவர் முதலீடு செய்ய விரும்ப காரணம் வரி மட்டுமே. அதிக வரி காரணமாக நேரடியாக இந்தியாவில் பேக்ட்ரி கட்ட விரும்புகிறார். இந்தியா அதிகம் வரி போடுகிறது. முக்கியமாக வெளிநாட்டு கார்களுக்கு அதிக இறக்குமதி வரி போடுகிறது. இதற்காக நேரடியாக அங்கே டெஸ்லா உற்பத்தி மையத்தை உருவாக்க மஸ்க் நினைக்கிறார். அது பெரிய தவறு. அமெரிக்காவிற்குத்தான் சிக்கல், என்று டிரம்ப் பாய்ந்து உள்ளார். இதனால் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய டெஸ்லா வராமல் போகலாம்.

மின்னணு சாதனங்கள், ஸ்டீல் உள்ளிட்ட உற்பத்தி துறை

டிரம்பின் 25% வரியானது மடிக்கணினிகள் மற்றும் டெஸ்க்டாப் சாதனங்கள், மொபைல் சாதனங்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மீதும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் போன், லேப்டாப் பொருட்களின் ஏற்றுமதி பெரிய அளவில் சரியலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த புதிய வரி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் இந்தியாவிற்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அதிக அளவில் இந்திய எஃகு பயன்படுத்தப்படும் நிலையில், டிரம்ப்பின் இந்த முடிவு இந்தியாவின் எஃகு ஏற்றுமதியை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க வர்த்தகர்கள் வேறு நாட்டு எஃகு பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச அரசியலில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Take a Poll

நாங்கள் மற்ற நாடுகளை சமமாக நடத்த விரும்புகிறோம், என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார். இறக்குமதி - ஏற்றுமதி வரியில் டிரம்ப் கண்டிப்பானவர். இந்தியா இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.. டிரம்ப் வரியை ஏற்றுவார். இதனால் இந்தியாவில் பொருட்கள் உயரலாம்.

ஏற்றுமதி துறை

அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்து உள்ளது. இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். அவ்வளவுதான்.. விஷயம் மிகவும் எளிமையானது. இந்தியா அல்லது சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி.. நாடு எதுவாக இருந்தாலும், அவர்கள் என்ன கட்டணம் வசூலித்தாலும், நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்.. நாங்களும் அதே கட்டணம் வசூலிப்போம்.. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம் அவ்வளவுதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹெல்த்கேர்

இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதிக்க உள்ள வரிகள் காரணமாக, இந்தியாவின் ஹெல்த்கேர் ஏற்றுமதி சிஸ்டம்.. அதாவது சுகாதாரத்துறை மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவிற்கு இந்தியாவின் மருந்துகள் வருடா வருடன் 300 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதோடு அங்கே பயன்படுத்தப்படும் 10 மருந்துகளில் ஒன்று இந்திய மருந்து ஆகும். தற்போது இதன் ஏற்றுமதி பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் அங்கே மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதே சமயம் நம்முடைய ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயங்கள் உள்ளன.

இது என்ன மாதிரியான வரி

இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100% வரை வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி.

அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும். அதாவது ஒரு துறையில் உள்ள ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவிகிதம் வரி விதிக்கிறது. அமெரிக்கா 10 சதவிகிதம்தான் வரி விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த புதிய விதிப்படி அமெரிக்காவும் அதே 30% வரியை இனி விதிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் வருடத்திற்கு சுமார் $7 பில்லியன் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருடா வருடம் இந்தியாவிற்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க அதிபரின் வர்த்தக போர் காரணமாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை இரசாயனங்கள் துறை , உலோக பொருட்கள் துறை, நகைகள் துறை, மேலும் ஆட்டோமொபைல்கள் துறை , மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் துறை ஆகியவை பாதிக்கப்படும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக இரசாயனங்கள், உலோக பொருட்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவில் இருந்து செய்யப்படும் ஆட்டோமொபைல் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இந்த ஏற்றுமதி 15 சதவிகிதம் வரை பாதிக்கும், மருந்து ஏற்றுமதி 30 சதவிகிதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

பதிலடி வரிகள் என்றால் என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி. அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும். அதாவது ஒரு துறையில் உள்ள ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவிகிதம் வரி விதிக்கிறது. அமெரிக்கா 10 சதவிகிதம்தான் வரி விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த புதிய விதிப்படி அமெரிக்காவும் அதே 30% வரியை இனி விதிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+