4 பக்கமும் மரணம் சூழ்ந்த போதும் தாயகம் பிரியாத பிரபாகரனின் பேராண்மை எங்கே? ராஜபக்சே எங்கே?- வைரமுத்து
சென்னை: நான்கு பக்கமும் மரணம் சூழ்ந்த போதும் தாயகம் பிரியேன் என்ற பிரபாகரனின் பேராண்மை எங்கே என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சுற்றுலா துறையும் தேயிலை ஏற்றுமதியும் கடுமையான சரிவை சந்தித்தன. இதனால் அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
விலைவாசி உயர்வும் விண்ணை முட்டியது. இதை கட்டுக்குள் வைத்திருக்க முடியாத அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக இலங்கை மக்கள் போராட்டம் நடத்தினர்.

செப்டம்பர் மாதம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலே இலங்கையில் பொருளாதார நிலை சரிவை சந்தித்த நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பசி பட்டினியால் வாடினர். பலர் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர். ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ 1000 த்திற்கு விற்பனையானது.

பெட்ரோல் டீசல்
பெட்ரோல் ,டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையும் அதிகரித்து அரசு பணம் கொடுக்காததால் அங்கு எரிபொருள் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் ராஜபக்சக்கள் பதவி விலக வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால இலங்கையே பற்றி எரிந்தது.

போராட்டம்
ஆங்காங்கே போராட்டம், வன்முறை, கலவரம், ராணுவத்தை ஏவி விட்டு ராஜபக்ச நடத்திய துப்பாக்கிச் சூடு என கலவர பூமியாக இருந்து வந்தது. இந்த நிலையில்தான் கடும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். இதையடுத்து மக்கள் போராடடம் தொடர்ந்ததை அடுத்து அவர் பாதுகாப்புடன் அலரி மாளிகையை (பிரதமர் மாளிகை) விட்டு வெளியேறினார்.

வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சி
இந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. சில ஊடகங்களில் அவர் தப்பிவிட்டதாகவே சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனது மக்களுக்காக கடைசி வரை தாய்நாட்டில் இருந்து பிரபாகரன் போராடி மாண்ட நிலையில் ராஜபக்சவோ நாடு கடக்க துடிக்கிறார் என கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
Recommended Video

வைரமுத்து ட்வீட்
இந்த நிலையில் இதுகுறித்து வைரமுத்து ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் நான்கு பக்கம்
மரணம் சூழ்ந்தபோதும்
'தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற
பிரபாகரத் தமிழனின்
பேராண்மை எங்கே...
ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே...
ஓ
சர்வதேச சமூகமே!
இப்போதேனும்
தமிழன் வீரத்திற்குத்
தலைவணங்கு
இவ்வாறு தனது ட்வீட்டில் வைரமுத்து கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications