வண்டலூர் தலைகீழா மாறுதே.. உயிரியல் பூங்காவில் பார்த்தீங்களா? தனி டிக்கெட் கவுண்ட்டர்.. மக்கள் ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் இருக்கும் உயிரியல் பூங்காக்களிலேயே "சிறந்த பூங்கா" என்ற விருதை பெற்றுள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா, பொதுமக்களின் வசதிக்காக சில அதிரடிகளை மேற்கொண்டுள்ளது. பூங்காவின் இந்த நடவடிக்கையானது, சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாக திகழ்வது நம்முடைய வண்டலூர் பூங்காவாகும். கடந்த 1855ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த பூங்கா அமைக்கப்பட்டது. அப்போது இந்த விலங்கியல் பூங்காவிற்கு "மெட்ராஸ் பூங்கா" என்று பெயர்..

vandalur zoo chennai vandalur park ticket counter

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த இந்த பூங்கா, விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது.. அப்போது முதல், அதன் பெயரும், 'வண்டலூர் உயிரியல் பூங்கா என்று மாறியது.

வண்டலூர்: இந்த பூங்காவில் அரிய வகை மிருகங்கள் பல உள்ளன.. 2,400 மிருகங்கள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல அரியவகை பறவைகளும் உள்ளன.. இதை ரசிப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் வண்டலூருக்கு திரண்டு வருவது வாடிக்கையாகும். அந்தவகையில், ஒருநாளைக்கு, 2500 முதல் 3000 பேர் வரை இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள்.. விடுமுறை நாளில், தினமும் 10 ஆயிரம் பேர்கூட வந்து செல்வார்கள்..

இந்த பூங்காவை சுற்றிபார்க்க ரூ.100 டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், விலங்குகளின் சாப்பாட்டுக்கே ரூ.6 கோடிக்கு மேல் ஆகிவிடுவதாலும், பூங்கா ஊழியர்களின் சம்பளத்துக்கு ரூ.7 கோடி வரை செலவாகிவிடுவதாலும், கட்டணம் 200 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதேபோல, பூங்காவுக்குள் குடும்பத்துடன் பேட்டரி காரில் சுற்றிவர கட்டணம் ரூ.1550 என்றும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

கட்டண உயர்வு: தொடர்ந்து 4 வருடங்களாகவே கட்டண உயர்வு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், கடந்த வருடம் செப்டம்பர் முதல், இந்த கட்டண உயர்வு அதிகரிக்கப்பட்டது, சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சியை தந்தது. எனவே, கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், இப்பூங்காவில் நேரிடையான, கவுன்டர் கட்டண முறை ரத்து செய்து, ஆன்லைன் கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது.. அதன்படி, பூங்காவிற்கு வரும் பொதுமக்கள், அங்குள்ள க்யூ.ஆர், குறியீட்டை, ஸ்கேன் செய்து, பெரியவர்கள் எத்தனை பேர்? சிறியவர்கள் எத்தனை பேர்? என்பதை பதிவிட வேண்டும்.

ஆன்லைன் கட்டணம்: பிறகு, அதற்கான கட்டணத்தை, பணம் பரிமாற்ற செயலியான, ஜிபே, பேடிஎம் மூலம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தியவுடனே, பார்வையாளர்களின் செல்போன் நம்பருக்கு டிக்கெட் அனுப்பப்பட்டு விடும். இந்த டிக்கெட்டை நுழைவு வாயிலில், ஸ்கேன் செய்து, பூங்காவிற்குள் செல்லலாம்.

ஆன்லைன் முறையில் டிக்கெட் அமல்படுத்தப்பட்டுள்ளதை, பொதுமக்கள் வரவேற்று வருகிறார்கள்.. எனினும், சாதாரண செல்போன் போன் பயன்படுத்துபவர்கள், வாட்ஸ்அப், ஜிபே போன்ற வசதிகள் இல்லாதவர்கள், அந்த வசதிகள் இருந்தாலும், அவைகளை சரியாக உபயோகிக்க தெரியாதவர்கள், டிக்கெட் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

எனவே, ஆன்லைன் வசதி இல்லாதவர்களுக்காக, ஒரு டிக்கெட் கவுன்டரையோ அல்லது மாற்றுவழியையோ பூங்கா நிர்வாகம் கடைபிடிக்க வேண்டும் என்ற கோாரிக்கை வலுவாக எழுந்தது.

பொதுமக்கள் மகிழ்ச்சி: பொதுமக்களின் இந்த கோரிக்கையும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.. அதன்படி, செல்போனில் ஆன்லைன் வசதி இல்லாத பார்வையாளர்களின் வசதிக்காகவே, ஒரு நுழைவு டிக்கெட் கவுன்டர், ஒரு பேட்டரி வாகன கவுன்டர் மீண்டும் திறக்கப்பட்டு, நேற்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது...

வண்டலுார் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் டிக்கெட் எடுக்க வசதியாக, ஒரு நுழைவு டிக்கெட் கவுன்டர், ஒரு பேட்டரி வாகன கவுன்டர் பயன்பாட்டிற்கு வந்துள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+