வந்தது படுக்கை வசதி வந்தே பாரத் ரயில்.. ஓடப்போகும் ரூட் இது தான்? கட்டணம் எவ்வளவுன்னு பாருங்க?
சென்னை: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என்று பயணிகள் நீண்ட நாள் எதிர்பார்த்து வந்த நிலையில் ஒருவழியாக ரயில் இயக்கப்படும் ரூட் மற்றும் கட்டண விவரங்களை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள இரண்டு மாநிலங்களின் தலைநகரை இணைக்கும் வகையில் இந்த ரயில் இயக்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் பயணிகளின் வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நாட்டின் அதி நவீன சொகுசு ரயிலாக வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

வந்தே பாரத் ரயில்கள்
இந்த ரயிலில் உள்ள நவீன சொகுசு வசதிகள் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இதனால், அடுத்தடுத்து பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டிலும் சென்னை - நாகர்கோவில், சென்னை - கோவை, மதுரை - பெங்களூர், சென்னை - நாகர்கோவில் உள்ளிட்ட ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வந்தே பாரத் ரயில்கள் முற்றிலும் ஏசி வசதி கொண்டவை ஆகும். சொகுசான இருக்கைகள், அகன்ற ஜன்னல் கண்ணாடிகள், சிசிடிவி கேமரா, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் இந்த ரயிலில் உள்ளன. இந்த ரயிலில் உள்ள சொகுசு வசதிகளும் அதிவேகமும் பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது. இதனால், தொடர்ச்சியாக பல்வேறு ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சோதனை ஓட்டமும் வெற்றி
அதே நேரத்தில், வந்தே பாரத் ரயில்கள் தற்போது இருக்கை வசதி கொண்ட ரயிலாகவே இயக்கப்படுகின்றன. அதிலும் பகல் நேரத்தில் இயக்கப்படுகின்றன. இதனால், தொலைதூரங்களுக்கு பயணிக்கும் வகையில் ஸ்லீப்பர் ரயிலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடம் எழுந்தது. இதை ஏற்ற ரயில்வே, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை தயாரிக்கும் பணியை தொடங்கியது.

பெங்களூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. பின்னர் சென்னை ஐசிஎப்பிற்கு கொண்டு வரப்பட்டு இந்த ரயிலின் சோதனை ஓட்டமும் நடைபெற்றது. பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கூட மணிக்கு 180 கி.மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை இயக்கி சோதித்து பார்க்கப்பட்டது.
கொல்கத்தா டூ கவுகாத்தி ரூட்டில்
அப்போது முற்றிலும் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு கண்ணாடி டம்ளரில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட சிந்தாமல் இருந்த காட்சிகள் வெளியிடப்பட்டன. ரயில் அதிர்வு இன்றி சொகுசான பயணம் உறுதி செய்யப்படும் என்பதை காட்டும் வகையில் இந்த வீடியோவை ரயில்வே வெளியிட்டது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எந்த ரூட்டில் இயக்கப்படும்? எப்போது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில்தான், நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்படும் வழித்தடம் எது என்பது பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. கொல்கத்தாவில் இருந்து கவுகாத்தி வரையிலும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
கட்டணம் எவ்வளவு?
அடுத்த 15 - 20 நாட்களில் இந்த ரயில் சேவை தொடங்கும், அதாவது ஜனவரி 18 அல்லது 19 ஆம் தேதிகளில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். பிரதமர் மோடியுடன் பேசிய பிறகு அடுத்த இரண்டு, மூன்று தினங்களில் தேதி இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

கட்டணத்தைப் பொறுத்தவரை, கவுகாத்தி - கொல்கத்தா ரூட்டில் விமான கட்டணம் ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை உள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் மூன்றாம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.2,300, இரண்டாம் வகுப்பில் ரூ.3,000 (உணவு உட்பட), முதல் வகுப்பிற்கு ரூ.3,600 கட்டணமாக நிர்ணயிக்கப்படும் என்றார்.
நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேற்கு வங்கம் மற்றும் அசாமில் வரும் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மாநிலங்களுக்கு இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட உள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications